பகலில் ஓட்டுநர்.. இரவில் திருடன்.. வீட்டின் பூட்டை உடைக்காமலேயே கொள்ளை - சிக்கி...
"நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைப்பேன்" - உமர் காலித்திற்கு நியூயார்க் மேயரின் குறிப்பு
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழிந்தும், இன்னும் சிறையில் இருந்து வருகிறார் மாணவச் செயற்பாட்டாளர் உமர் காலித்.
டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெரிய போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக உமர் காலித்தைச் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967-ன் கீழ் கைது செய்து சிறையிலடைத்தது அரசு.
அவருக்குத் தற்போதைய நியூயார்க் மேயரான ஜோஹ்ரான் மம்தானி எழுதிய குறிப்பை உமர் காலித்தின் இணையர் பனோஜ்யோத்ஸ்னா லஹிரி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி, உமர் காலித்திற்கு எழுதிய குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...

"அன்புள்ள உமர்,
கசப்புணர்வு ஒரு மனிதனை அழித்துவிடாமல் தடுப்பது முக்கியம் என்று நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைத்து பார்ப்பேன்.
உங்களுடைய பெற்றோரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
நாங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம்" என்று எழுதியுள்ளார்.
கடந்த நவம்பர் 4-ம் தேதி நியூயார்க் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஹ்ரான் மம்தானி, நேற்று பதவியேற்றுள்ளார்.
இந்த நிலையில், பனோஜ்யோத்ஸ்னா லஹிரி பகிர்ந்துள்ள உமர் காலித் குறித்த ஜோஹ்ரான் மம்தானியின் குறிப்பு வைரலாகி வருகிறது.
















