செய்திகள் :

நீட் வினாத்தாள் கசிவு: "ரூ.5 லட்சத்திற்கு வினாத்தாள் பேரம் பேசப்பட்டிருக்கிறது" - மாணிக்கம் தாகூர்

post image

மஹாராஷ்டிராவில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்து கேள்வி எழுப்பி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர்...

"பாஜக கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே இதுபோன்ற முறைகேடுகளும் NEET வினாத்தாள் கசிவுகளும் தொடர்கின்றன!

மஹாராஷ்டிரா லாத்தூர் மருத்துவமனையில் ₹5 லட்சத்திற்கு வினாத்தாள் பேரம் பேசப்பட்டு, தேர்வு நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பே (ஏப்ரல் 23) Samsung Fold7 போனில் 132 கேள்விகள் புகைப்படம் எடுக்கப்பட்டு கசிந்துள்ளன.

நீட்
நீட்

மேலும் ₹30,000-க்கு PhonePe மூலம் வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டு கேரளா முதல் ராஜஸ்தான் வரை WhatsApp வழியே பரவியுள்ளது என CBI அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.

பிரதமர் மோடி அவர்களும், மஹாராஷ்டிர முதலமைச்சரும் தேவேந்திர பட்னாவிஸும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

இதையெல்லாம் மறைக்க நேற்று அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்ட "ஹேக்-ப்ரூஃப்/ஆண்டி-பேப்பர் லீக்" சட்டமும், சிறப்பு நீதிமன்றங்கள், 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ₹10 கோடி அபராதம் போன்ற காகித அறிவிப்புகளும் வெறும் கண் துடைப்பு நாடகமே அன்றி வேறில்லை!

வினாத்தாள் கசிவைத் தடுக்கத் துப்பில்லாத பாஜக அரசு கொண்டு வரும் இந்த போலி சட்டங்களால் ஒரு பயனும் இல்லை!

கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் இந்த அநியாயத்திற்குப் பிறகும் மௌனம் காப்பது ஏன்?" எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க