செய்திகள் :

நீலகிரி: குப்பையில் தவறிய தங்க மோதிரம்; தேடி உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணிப் பெண்கள்!

post image

நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது மைல் பகுதியைச் சேர்ந்தவர் கதீஜா. வழக்கம்போல் வீட்டின் குப்பைகளை சேகரித்து நகராட்சி தூய்மை வாகனத்தில் நேற்று முன்தினம் காலை கொடுத்திருக்கிறார். வீட்டிற்கு சென்று பார்த்தபோது கையில் அணிந்திருந்த அரை பவுன் மோதிரம் ஒன்றை தவறிவிட்டிருப்பதைக் கண்டு கவலையடைந்திருக்கிறார். வீட்டில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் குப்பையில் தவறியிருக்கலாம் என சந்தேகித்த கதீஜா, இது குறித்து கூடலூர் நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறார்.

Rep image AI

சம்பந்தப்பட்ட தூய்மை பணியாளர்களின் கவனத்திற்கு கொண்டுச் சென்றிருக்கிறது நகராட்சி நிர்வாகம். அந்த பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட சுமதி, ஜோதி ஆகிய இரண்டு பெண்களும் உடனடியாக குப்பைக் கிடங்கிற்குச் சென்று, குப்பைகளை கொட்டிய இடத்தில் நீண்ட நேரம் தேடி ஒருவழியாக மோதிரத்தைக் கண்டறிந்து நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். கதீஜாவை வரவழைத்து மோதிரத்தை அவர் கையில் ஒப்படைத்திருக்கிறார்கள். குப்பையில் தவறவிட்ட அரை பவுன் மோதிரத்தை தேடி உரியவரிடம் ஒப்படைத்த பெண்களுக்கு பரிசாக புத்தாடைகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறது நகராட்சி நிர்வாகம்.

`அப்பா இறந்ததோட கேரமும் போயிருச்சுனு.!’ - மரப்பட்டறை டு உலகக்கோப்பை; கேரமில் சாதித்த கீர்த்தனா

7-வது கேரம் உலகக் கோப்பை போட்டி இந்த மாதம் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மாலத்தீவின் மாலே நகரில் நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் தமிழகத்தை... மேலும் பார்க்க

'கல்வி மட்டும் இருந்தால் போதும்' - 3 அடி உயரம் கொண்ட 'வைரல்' டாக்டர் கணேஷின் வைராக்கிய கதை!

கல்வி மட்டும் இருந்தால் போதும். மருத்துவர் ஆக, 'உயரம் ஒரு தடை இல்லை' என்று வைராக்கிய சாதனை புரிந்துள்ளார் 3 அடி உயரம் கொண்ட கணேஷ் பரையா.தொடர்ந்து தடைகள்குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டத்தை சேர்ந்த கோர... மேலும் பார்க்க