செய்திகள் :

நீலகிரி: பள்ளத்தில் சரிந்த யானை; இரண்டு தந்தங்களை மட்டும் மீட்ட வனத்துறை; என்ன நடந்தது?

post image

ஆசிய யானைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் முறையின்றி மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளின் காரணமாக யானைகளின் வாழிடங்களும் வழித்தடங்களும் கடுமையான சிதைவுக்கு உள்ளாகி வருகின்றன.

உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு இடம்பெயர முடியாமல் தவித்து வருகின்றன.

மீட்கப்பட்ட தந்தங்கள்
மீட்கப்பட்ட தந்தங்கள்

நில அமைப்பில் நாம் ஏற்படுத்தியிருக்கும் பெரிய அளவிலான மாற்றங்களால் யானைகள் தடம் மாறுவதுடன் அடிசிறுக்கி பள்ளங்களில் விழுந்து பரிதாபமாக உயிரிழக்கும் துயரங்கள் அண்மைக் காலமாகத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக குன்னூர், கூடலூர் பகுதிகளில் இதுபோன்ற இறப்புகள் தொடர்கதையாகி வருகின்றன.

இந்த நிலையில் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட காட்டி மட்டம் பகுதியில் வனத்துறையினர் நேற்றுமுன்தினம் ரோந்து மேற்கொள்கையில் பள்ளத்தாக்கு பகுதியில் யானையின் எலும்புக்கூடு கிடப்பதைக் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இரண்டு யானை தந்தங்களை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட தந்தங்கள்
மீட்கப்பட்ட தந்தங்கள்

இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், "காட்டி மட்டம் வனப்பகுதியில் யானையின் உடல் பாகங்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்தோம். கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் உடல் பாகங்களைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம்.

நிலைத்தடுமாறி விழுந்த ஆண் யானை மேலே எழ முடியாமல் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். இரண்டு தந்தங்களை மட்டும் முழுமையாக மீட்க முடிந்தது. இறப்புக்கான முழுமையான காரணம் உடற்கூராய்வு முடிவுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்படும்" என்றனர்.

ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.! | EP 03

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம்... மேலும் பார்க்க

ECO India : இறால் பண்ணை முதல் Pizza வரை... வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.! - இந்த வாரம் தயாரா?

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம்... மேலும் பார்க்க

69 இனங்கள்; 21,091 பறவைகள்... பாசனக் குளங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வலசை பறவைகள்!

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வரியினை வாழ்வாக்கிய பறவை, வலசை. பறவைகள் பல காரணங்களுக்காகப் பயணத்தை மேற்கொள்கின்றன.பறவைகள் வெப்பமான பகுதிக்கு நகரவும், உணவுக்காகவும், வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து ... மேலும் பார்க்க

ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.! | EP 02

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம்... மேலும் பார்க்க

மாமல்லன் நீர்த்தேக்கம்: `எதிர்ப்பு கிளம்ப இதுதான் காரணம்' - தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் அமைக்கப்பட்டுவரும் மாமல்லன் நீர் தேக்கம் சூழலியலாளர்கள் மத்தியில் அதிருப்தியையும், எதிர்ப்பையும் சம்பாதித்திருக்கிறது. சென்னை குடிநீர் தேவையை நிவர்த்திச் செய்யும் எ... மேலும் பார்க்க