செய்திகள் :

"நூற்றுக்கணக்கான நடிகர்கள்; 100 நாள்கள் படப்பிடிப்பு!"- ‘பள்ளிச்சட்டம்பி’ படம் குறித்து டொவினோ தாமஸ்

post image

டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி இருக்கிறார்.

ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (மார்ச்.30) நடைபெற்றது. இதில் டொவினோ தாமஸ் கலந்துகொண்டார்.

‘பள்ளிச்சட்டம்பி’
‘பள்ளிச்சட்டம்பி’

"2018 ஆம் ஆண்டே இப்படத்தின் கதையை பற்றி நானும், டிஜோ ஜோஸும் (இயக்குநர்) விவாதித்தோம். நீண்ட விவாதத்திற்குப் பிறகு திரைக்கதையை வடிவமைத்து 2025-ம் ஆண்டில் தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம்.

நாங்கள் இருவரும் வேறு வேறு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தோம். அதனால் இப்படத்தின் பணிகளை தொடங்க தாமதம் ஆனது. நூறு நாள்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது.

ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இது எளிதான காரியம் அல்ல. இதற்கு கடின உழைப்பும் தேவை. இது ஒரு பீரியட் மூவி.

1957- 58 காலகட்டத்தைச் சார்ந்த படம். அந்தக் காலகட்டத்தில் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு, பின்னணியில் இடம்பெறும். இது உண்மைச் சம்பவம் அல்ல.

டொவினோ தாமஸ்
டொவினோ தாமஸ்

ஆனால் சில சம்பவங்களை தழுவி நிறைய கற்பனையான கதாபாத்திரங்களுடன் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.

ரசிகர்களுடன் திரைப்படத்தின் முழு வடிவத்தை திரையரங்குகளில் பார்ப்பது தான் எனக்கு பிடிக்கும். அதனால் இந்தப் படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என்று பேசியிருக்கிறார்.

மேஜர் ரவி முதல் அஞ்சலி நாயர் வரை! - கேரளா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டிருக்கும் திரைப்பிரபலங்கள்

கேரளாவில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 3 மணி வரையிலான நிலவரப்படி, 62 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு தேர்தலிலும் நடிகர்கள் பலரும் புதிதாக அரசி... மேலும் பார்க்க

Mammootty: " `லோகா' படத்தில் என்னை ஏமாற்றிவிட்டார்கள்" - மம்மூட்டி கலகல

18 வருட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்திருக்கும் 'பேட்ரியாட்' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை 'சீ யூ சூன்', 'மாலிக்' போன்ற திரைப்படங்களை இய... மேலும் பார்க்க

Patriot: "நீண்ட நாட்களுக்குப் பிறகு நாங்கள் சேர்ந்து நடித்ததற்கான காரணம்?!" - மம்மூட்டி

18 வருட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்திருக்கும் 'பேட்ரியாட்' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை 'சீ யூ சூன்', 'மாலிக்' போன்ற திரைப்படங்களை இய... மேலும் பார்க்க

"அகந்தை அகன்றது, அன்பு வென்றது" - 10 ஆண்டு காலத் தனிமைக்கு முற்றுப்புள்ளி - இயக்குநர் பிரியதர்ஷன்

இந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோயினி படமாக வெளியானது லோகா. இந்தப் படத்தின் மூலம் இந்தியத் திரையுலகின் முக்கிய நாயகியாக வலம் வருபவர் நடிகை கல்யாணிப் பிரியதர்ஷன். இவருடைய அப்பா இயக்குநர் பிரியதர்ஷன்... மேலும் பார்க்க

தென்னிந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைக்கும் டாப் 4 Gen Z மலையாள நாயகிகள்!

யதார்த்தமான கதைகள், உணர்வுப்பூர்வமான நடிப்பு - இதுதான் மலையாள சினிமாவின் அடையாளம். ஆனால் இன்று அந்த அடையாளத்தைத் தாண்டி, சமூக வலைத்தளங்களின் ரீல்ஸ் முதல் தியேட்டர் ஸ்கிரீன் வரை தென்னிந்திய ரசிகர்களின்... மேலும் பார்க்க

'துல்கர் சல்மானுக்கும் எனக்கும் பிரச்னையா?'- டொவினோ தாமஸ் விளக்கம்

டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி இருக்கிறார். ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்த... மேலும் பார்க்க