செய்திகள் :

நெல்லை: சொகுசு காரில் கஞ்சா கடத்தி வந்த தூத்துக்குடி சிறை வார்டன்; சிக்கியது எப்படி?

post image

தூத்துக்குடி மாவட்டம், விட்டிலாபுரத்தைச் சேர்ந்தவர் தமிழரசன். நெல்லை சிறையில் வார்டனாகப் பணிபுரிந்தார். கஞ்சா வழக்குகளில் சிக்கிய கைதிகளுடன் அவர் நெருக்கமாகப் பழகி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ததாகப் புகார் எழுந்தது.

இதனையடுத்து அவர், தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கும் கஞ்சா வழக்குகளில் சிக்கிய கைதிகளுடனான தொடர்பை தமிழரசன் தொடர்ந்தார். இதன் மூலம் அவர், கஞ்சாவை மொத்தமாக வாங்கி பொட்டலங்களாகப் பிரித்து விற்றது போலீஸாருக்குத் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட தினேஷ் - வார்டன் தமிழரசன்
கைது செய்யப்பட்ட தினேஷ் - வார்டன் தமிழரசன்

தமிழரசனின் நடவடிக்கைகளை உளவுப்பிரிவு போலீஸார் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், ஒரு வாரம் விடுப்பு எடுத்த தமிழரசன் நெல்லைக்கு வந்திருந்தார். இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி இரவு நெல்லை டவுண் காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ரூ.10 லட்சம் பணம் மற்றும் 2 கிலோ கஞ்சா இருந்தது. காரில் இருந்த தமிழரசன், முறப்பநாட்டைச் சேர்ந்த நவீன், ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

கஞ்சா மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழரசன் பணிபுரிந்த பேரூரணி சிறையில் அவருடன் பழகிய கைதிகள், நண்பர்களிடம் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தமிழரசனுக்கு கஞ்சா கடத்தல் கும்பலில் வேறு யார் யாருடன் தொடர்பு உள்ளது.

இதுவரை எவ்வளவு காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தார், இதில் வேறு சிறை ஊழியர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்க அவரைக் காவலில் எடுக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

பேரூரணி சிறை
பேரூரணி சிறை

பின்னர் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், நெல்லை சரக சிறைத்துறை எஸ்.பி., செந்தாமரைக் கண்ணன் தலைமையிலான 75-க்கும் மேற்பட்ட போலீஸார் பேரூரணி சிறையில் சோதனை நடத்தினர்.

200-க்கும் மேற்பட்ட கைதிகளின் அறைகள், சமையலறை, பொருட்கள் வைப்பறை, பதிவேடுகள் அறை, கழிவறை, கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் சோதனை நடத்தினர். ஆனால், எந்தவிதமான போதைப் பொருளும் சிக்கவில்லை. சிறைவார்டன் தமிழரசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

`போலீஸாக ஆசைப்பட்ட எனக்கு யூனிபார்ம் வேல்யூ தெரியும்; ஒருவித கோபத்தில்.!'- அன்று போலீஸை அடித்த ஆகாஷ்

தஞ்சாவூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஃப்ளக்ஸ் மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டது. இதில் விசிக-வினர் வைத்த ஃப்ளக்ஸ் அகற்றப்பட்டதால் அக்கட்சியினர் மாநகராட்சி அலுவலகம் எதிரே திடீர் சாலை மறியல் போராட்டம் ந... மேலும் பார்க்க

கடலூர்: `அண்ணிக்கு என்னைத்தான் பிடிக்கும்!’ - அண்ணனை `ஸ்கெட்ச்’ போட்டு முடித்த உடன்பிறவா தம்பி

கடலூர் மாவட்டம், ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா கட்டுமானப் பணிகள் செய்யும் கூலித் தொழிலாளி. இவரும், பட்டாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அஸ்வினிதா என்பவரும் ஒருவரையொருவர் காதலித்து, கடந்த 2016-ம... மேலும் பார்க்க

சென்னை: காதல் விவகாரம்; இளைஞர் கொலை - த.வெ.க ஆதரவாளர், அவரின் குடும்பத்தினர் கைது!

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரின் மகன் பிரவீன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த த.வெ.க ஆதரவாளர் ஏழுமலை என்பவரின் மகளை சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் க... மேலும் பார்க்க

மும்பை: பேஸ்புக் லிங்க்கை கிளிக் செய்ததால் பறிபோன ரூ.50 லட்சம்; முன்னாள் வங்கி அதிகாரியிடமே மோசடி

மும்பை புறநகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்வரி(70) என்ற பெண் மும்பை கோரேகாவ் பகுதியில் வசித்து வருகிறார். இவர் பிரபல வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார். இவர் ஓய்வு பெற்றபோது கிடைத்த தொகையை வங்கிகளில்... மேலும் பார்க்க

அலறடித்த சத்தம்; கணவரைக் கொன்று குடலை வெளியில் எடுத்த பெண் - கண்டு அதிர்ந்து போன வீட்டின் உரிமையாளர்

ஹரியானா மாநிலம், குருஷேத்ராவில் வசித்தவர் ராஜேஷ். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் மனைவி விமலா. இவர் பில்லி சூனியம் மற்றும் பேயோட்டுதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். அவர்களுக... மேலும் பார்க்க

ஸ்நேப்சாட், வாட்ஸ்ஆப் மூலம் போதைப்பொருள் விற்பனை; பாலிவுட் நடிகரைக் கைதுசெய்த மும்பை போலீஸ்!

மும்பையில் சமூக ஊடகங்கள் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் இது குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர். ஸ்னாப்சாட் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வ... மேலும் பார்க்க