செய்திகள் :

நெல்லை: திருமணம் மீறிய உறவு - கார் வாங்குவது போல் வரவழைத்து வியாபரி கொலை செய்யபட்ட கொடூரம்!

post image

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள முதலூரைச் சேர்ந்தவர் மார்ட்டின் ஸ்டான்லி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம், சீவலப்பேரி தோணித்துறை சுடுகாட்டுப் பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சீவலப்பேரி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சீவலப்பேரி

மார்ட்டின் ஸ்டான்லியின் உடல் அருகில் மது பாட்டில்கள் கிடந்ததால், நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் முதல் கட்ட விசாரணையை தொடங்கினர். இச்சம்பவம் தொடர்பாக முருகப்பெருமாள், நம்பிராஜன், கிதியோன் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில், நம்பிராஜன் என்பவர் ஸ்டான்லியின் நண்பர். இவர்தான் கார் வாங்குவது தொடர்பாக பேச வேண்டும் என மார்ட்டின் ஸ்டான்லியை சீவலப்பேரிக்கு வரச் சொல்லியுள்ளார். கைதான மூன்று பேரும், “மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்தோம்” எனக்கூறி போலீஸாரை திசை திருப்பினர்.

ஆனால், விசாரணையில் அவர்கள் கூறிய முன்னுக்குப் பின்னான தகவலால் சந்தேகமடைந்த போலீஸார், விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், ஏமன்குளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் மார்ட்டின் ஸ்டான்லிக்கு திருமணம் மீறிய உறவு இருந்து வந்துள்ளது. பழக்கத்தை கைவிடுமாறு அந்தப் பெண்ணின் சகோதரர் பலமுறை ஸ்டான்லியிடம்  கூறியும், அவர் பழக்கத்தை கைவிட மறுத்துள்ளார். இதனால், ஸ்டான்லியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

சீவலப்பேரி காவல் நிலையம்

அவரது தூண்டுதலின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் மார்ட்டின் ஸ்டான்லியை கார் வாங்குவது போல நாங்குநேரி அருகில் வரவழைத்துள்ளனர். அடித்துக் கொலை செய்துள்ளனர். கொலையை மறைப்பதற்காகவும் போலீஸாரை திசை திருப்பவும் அவரது சடலத்தை சீவலப்பேரி சுடுகாட்டுப் பகுதியில் போட்டுவிட்டு, அவரது உடலின் அருகில் மதுபாட்டில்களை சிதறவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்திற்கு காரணமான அந்த இளம்பெண்ணின் சகோதரரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவை கல்லூரி மாணவி மீது கத்தியால் குத்தி தாக்குதல் - சக மாணவன் வெறிச் செயல்

கோவை சத்தி உள்ள தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு 17 வயது மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே வகுப்பில் ஹர்ஷவர்தன் என்கிற 18 வயது மாணவர் படித்து வருகிறார். ஹர்ஷவர்தன் மாணவ... மேலும் பார்க்க

குஜராத்: 33 கிராமங்களுக்காக ரூ.21 கோடிக்கு கட்டிய தண்ணீர் தொட்டி- திறக்கப்படுவதற்கு முன்பே இடிந்தது!

குஜராத் மாநிலம் சூரத் அருகில் உள்ள தட்கேஷ்வர் என்ற கிராமத்தில் மாநில அரசு, 33 கிராமங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்காக ரூ.21 கோடியில் 9 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் 15 மீட்டரில் பிரம்மாண்... மேலும் பார்க்க

நெல்லை: சாலையில் தூக்கி வீசப்பட்ட ஆண் சிசுவின் சடலம்; நாய் கவ்விச் சென்ற அவலம்; பின்னணி என்ன?

நெல்லை, மேலப்பாளையம் அருகில் உள்ளது மேலநத்தம். இங்கு பழைய அரிசி ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலைக்குச் செல்லும் சாலையின் ஓரத்தில் தெருநாய் ஒன்று சிவப்பு நிறத் துணி சுற்றப்பட்ட ஒரு பார்சலை கவ்விச் சென்று வாய... மேலும் பார்க்க

`பொண்டாட்டினு கூட பார்க்காம அசிங்கமா வீடியோ எடுத்து.!’ அதிர வைக்கும் வரதட்சனை புகார்; விபரீத முடிவு

விழுப்புரம் மாவட்டம் பக்கிரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஏ பட்டதாரியான பிரியங்காவுக்கும், புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கும் கடந்த 2025 அக்டோபர் 31-ம் தேதி திரும... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு; 4 வயது பெண் குழந்தையை வன்கொடுமை செய்து கொன்ற கொடூரன்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் சத்யா . இவருக்கும் ராஜா என்பவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ராஜா இறந்து விட்டதால், தற்போது அந்தக்குழந்தை ராஜாவின் தாயிடம் வ... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகை: முதியவர்களைக் குறிவைத்து ரூ. 500ஐ அமுக்கிய ரேஷன்கடை ஊழியர்; அதிகாரிகள் விசாரணை

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்கு ரூ.3000 மற்றும் ஒரு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி மற்றும் வேட்டி, சேலை அறிவித்தது. இந்தப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப... மேலும் பார்க்க