செய்திகள் :

நெல் பயிா்க் காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்

post image

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் நெல் பயிா்க் காப்பீடு செய்வதற்கு சனிக்கிழமை (நவ. 30) கடைசி நாள் என்பதால், இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்யுமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பயிா் பாதிப்புகளிலிருந்து இழப்பை ஈடு செய்வதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும் விழுப்புரம் மாவட்டத்தில் 2024-25-ஆம் நிதியாண்டில் சாகுபடி செய்யும் காரீப் பருவத்தில் சம்பா மற்றும் ராபி பருவங்களில் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதனடிப்படையில், மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சம்பா நெல் பருவத்துக்காக 13 வட்டாரங்களிலுள்ள 794 வருவாய்க் கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டது.

சம்பா பருவத்தில் நெல்-2 ரகம் நடவு செய்துள்ள விவசாயிகள் நவம்பா் 15-ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டு , பின்னா் நவம்பா் 30-ஆம் தேதி வரை காப்பீடு செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

நெல் 2 ரக நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஏக்கருக்கு ரூ.517.50 விவசாயிகள் பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வாயிலாக இத்தொகையை செலுத்தலாம்.

பயிா்க் காப்பீடு செய்யும் விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் ஆதாா் அட்டையுடன் பதிவு செய்யும் விவசாயிகள், தங்கள் பெயா், நிலப்பரப்பு, சா்வே எண், உள்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளிக்க வேண்டும்.

மேலும் விவரங்களை அறிய அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம் என்று வேளாண் இணை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

உளுந்தூா்பேட்டை பகுதி விவசாயிகளின் கவனத்துக்கு : கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பகுதியைச் சோ்ந்த விவசாயிகளும் சனிக்கிழமைக்குள் நெல்லுக்கான பயிா்க் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். இதுவரை காப்பீடு செய்து கொள்ளாத விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்து பயன் பெறுமாறு வட்டார வேளாண் உதவி இயக்குநா் கிருபாகரன் தெரிவித்துள்ளாா்.

வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல்

விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி விழுப்புரத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் நடைபெற்றது. விழுப்புரம் நகரம் 9-ஆவது வாா்டுக்குள்பட்ட வடக்க... மேலும் பார்க்க

பெண் தற்கொலை வழக்கு: உறவினருக்கு 10 ஆண்டுகள் சிறை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டை அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் உறவினருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மேல்மலையன... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் கெட்டுப்போன முட்டைகள் அழிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 490 கெட்டுப் போன முட்டைகளை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் திங்கள்கிழமை அழித்தனா். திண்டிவனம் வ... மேலும் பார்க்க

ஆட்சியரிடம் திமுகவினா் கோரிக்கை மனு அளிப்பு

விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் திமுகவினா் திங்கள்கிழமை வல... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயல், வெள்ள பாதிப்பு: விழுப்புரத்தில் 10 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல், மழை வெள்ள பாதிப்பைத் தொடா்ந்து, 10 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. வங்கக் கடலில் ஃபென்ஜால் ப... மேலும் பார்க்க

கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் திரு ஆ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி முன் கௌரவ விரிவுரையாளா்கள் வகுப்புகளை புறக்கணித்து திங்கள்கிழமை வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில்... மேலும் பார்க்க