செய்திகள் :

'நேற்று இரவு கிளம்பிய பஸ் இன்று மாலை 6 மணிக்குத்தான்.!' - EC மீதான அண்ணாமலையின் 'தனிப்பட்ட' கருத்து

post image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை கவுண்டம்பாளையத்தில் வாக்களித்தார்.

அதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "சென்னையில் இருந்து தென் தமிழகத்திற்குச் செல்ல பேருந்து வசதி மிக குறைவாக இருக்கிறது என்று போன் மற்றும் மெசேஜ்கள் வந்தன.

தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் என இரண்டும் குறைவாக இருந்தது.

அதனால், தேர்தல் ஆணையம் இன்னும் இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டிருக்கலாமோ என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

அண்ணாமலை
அண்ணாமலை

போக்குவரத்துத் துறையைக் கையிலெடுத்து, தேவையான வழிமுறைகளைக் கொடுத்திருக்க வேண்டும். போதுமான பேருந்து வசதி இருக்கிறதா என்பதை பார்த்திருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, நேற்று இரவு சென்னையில் இருந்து கிளம்பிய பேருந்து, இன்று மாலை 6 - 6.30 மணிக்குத்தான் ராமநாதபுரத்திற்குச் செல்லவிருக்கிறது. அந்தளவிற்கு தாமதமாகிறது.

கட்சியைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் அனைவரும் இது குறித்து புகார் செய்கின்றனர்.

இந்த முறை தேர்தல் ஆணையம் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

வீடு வீடாக 5 பேர் சென்று ஒரு வாக்கிற்கு ரூ.5,000 தருகிறார்கள். கரூர் சட்டமன்றத் தொகுதியில் அரை கிராம் தங்கக் காசை தைரியமாக கொடுக்கிறார்கள்.

இதெல்லாம் ஒரு நாளில் வந்துவிடவில்லை. மைக்ரோ மேனேஜ் செய்து, பதுக்கி தான் இதையெல்லாம் செய்திருக்கிறார்கள்.

சாதாரண மக்கள் ரூ.50,000 கொண்டு சென்றால், எவ்வளவு நடைமுறைக்கு ஆளாகிறார்கள்.

எஸ்.ஐ.ஆர் பொறுத்த வரை, தேர்தல் ஆணையம் நேர்மையாக, நாணயமாக, நடுநிலையாக தமிழ்நாட்டில் செயல்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளுக்கு 100 மீட்டர்களுக்கு முன்பு, குறிப்பாக திமுக பல இடங்களில் சாஃப்ட் கேம்பைனிங் செய்கிறது. இதை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும்" என்றார்.

"இது வாக்குச்சாவடி, சினிமா படப்பிடிப்பு தளம் அல்ல..!" - வாக்களித்த சிம்ரன் பதிவு

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடக்கிறது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள். 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: "பாஜகவிற்குச் சாதகமாக போலீஸ்" - "TMC-க்குச் சாதகமாக அடியாட்கள்?" - TMC vs BJP புகார்

இன்று மேற்கு வங்கத்தில் முதல்கட்ட சட்டமன்றத் தேர்தல் நடந்து வருகிறது.2011-ம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்து வரும் திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி, நான்காவது முறையாக ஆட்சியைத் ... மேலும் பார்க்க

"முன்பு வாரம் ஒருவரை அடித்து தூக்கிலிட்டுவிட்டு தற்கொலை என்பார்கள்" - மேற்கு வங்கத்தில் மோடி பேச்சு

மேற்கு வங்கத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் இரண்டாம் கட்ட தேர்தலுக்காகப் பரப்புரை செய்து வருகிறார் பிரதமர் மோடி. மேற்கு வங்கத்தில் இன்று நடந்து வரும் முதல் கட்ட தேர்தல் குறித்து மோடி பிரசாரத்தில் பேசியதாவத... மேலும் பார்க்க

'நீதி கிடைக்கவில்லை' - தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் இறங்கிய வேங்கைவயல் மக்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பகுதி பட்டியலின சமூக மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் எனும் கிராமத்தில் வசிக்கும் பட்டியல் இன மக்கள... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்து நொறுக்கிய ஏஜென்ட்; காவல்துறை விசாரணை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று (ஏப்ரல்.23) நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என எல்லோரும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட... மேலும் பார்க்க