'ரூ.20 லட்சம் வருமானம்; பெற்றோர் ஐஏஎஸ்... பிள்ளைகளுக்கு ஏன் இட ஒதுக்கீடு?' - உச்...
பக்ரீத்: 'நோ' பசு, கன்றுக்குட்டி, ஒட்டகம் வெட்டுதல் - டெல்லி அரசு ஸ்ட்ரிக்ட் உத்தரவு!
வருகிற 28-ம் தேதி, பக்ரீத் பண்டிகை வர உள்ளது.
இதை முன்னிட்டு, டெல்லியில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி வளர்ச்சி அமைச்சர் கபில் மிஸ்ரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
"பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு டெல்லி அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்
> பக்ரீத் பண்டிகையின் போது பசு, கன்றுக்குட்டி, ஒட்டகம் மற்றும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட இதர விலங்குகளைப் பலியிடுவது முற்றிலும் சட்டவிரோதமானது. இந்த விதியை மீறுபவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படும்.

> பொது இடங்கள், தெருக்கள் அல்லது சாலைகளில் விலங்குகளைப் பலியிட அனுமதி இல்லை. அவ்வாறு செய்பவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
> பலியிடப்படும் விலங்குகளின் கழிவுகளைப் பாதாள சாக்கடைகள், கால்வாய்கள் அல்லது பொது இடங்களில் கொட்டுவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கென ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பலியிட வேண்டும்.
> இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டால், அது குறித்து மக்கள் காவல்துறைக்கோ அல்லது டெல்லி அரசின் வளர்ச்சி அமைச்சகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம்".
बकरीद के पर्व पर दिल्ली सरकार की गाइडलाइन्स
— Kapil Mishra (@KapilMishra_IND) May 22, 2026
: बकरीद पर गौवंश, गाय, बछड़ा, ऊंट व अन्य प्रतिबंधित जानवरों की कुर्बानी पूरी तरह गैरकानूनी है, ऐसा करने वालों पर आपराधिक मुकदमा दर्ज किया जाएगा
: सार्वजनिक स्थलों गली, सड़कों पर कुर्बानी की अनुमति नहीं है, ऐसा करने वालों पर भी कानूनी… pic.twitter.com/mKZtUSgHUx













