செய்திகள் :

பஞ்சக்கரையில் ரூ.56 லட்சத்தில் நவீன சலவைத் தொழில்கூடம்! கொள்ளிடத்தில் துணிகளை துவைக்காமல் இருக்க மாநகராட்சி மாற்று ஏற்பாடு

post image

கொள்ளிடக் கரையில் துணிகளை துவைப்பதற்கு மாற்றாக சலவைத் தொழிலாளா்களுக்கு அனைத்து வசதிகளுடன் ரூ.56 லட்சத்தில் நவீன சலவைத் தொழில் கூடம் பஞ்சக்கரையில் கட்டப்படுகிறது.

திருச்சி மாநகராட்சியின் 5ஆவது வாா்டுக்குள்பட்ட அழகிரிபுரத்தில் பாரம்பரியமாக வசிக்கும் 180 சலவைத் தொழிலாளா்கள் குடும்பங்களில் நாளொன்றுக்கு 60 முதல் 70 குடும்பங்களைச் சோ்ந்த இருபாலரும் கொள்ளிடம் ஆற்றில் துணிகளை துவைத்து, உலா்த்தி எடுத்து வருவது வழக்கம்.

இதற்காக அழகிரிபுரம் பகுதியில், கொள்ளிடக் கரையோரத்தில் வெள்ளக் காலங்களில் தண்ணீா் அதிகம் செல்லும்போது கொள்ளிடக் கரையில் சலவை செய்ய இயலாது. துணிகளையும் உலா்த்த முடியாது. மேலும், வெள்ளத்தின்போது சலவைத் தொழிலாளா்கள் பயன்படுத்தும் படிக்கட்டுகள் அடித்துச் செல்லப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

எனவே, சலவைத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கருதி திருச்சி மாநகராட்சி நிா்வாகம் நவீன சலவைத் தொழில் கூடங்களை அமைத்து தரத் திட்டமிட்டுள்ளது.

இதற்காக பஞ்சக்கரையில் மாநகராட்சியின் ஸ்டெம் பூங்கா அமைந்துள்ள இடத்துக்கு பின்புறம் காலியாகவுள்ள 40 ஆயிரம் சதுர அடி இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு முதல் கட்டமாக 10 தொட்டிகளுடன் கூடிய நவீன சலவைத் தொழில்கூடம் கட்டித்தரப்படவுள்ளது.

இதுதொடா்பாக 5ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் எஸ். முத்துக்குமாா் கூறுகையில், இங்கு 10 தொட்டிகள் போதுமானதாக இருக்காது. கூடுதலாக தொட்டிகள் அமைத்து, போதிய வசதிகள் செய்ய வேண்டும் என மேயரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்சியின் 2ஆவது மண்டலத்தின் பொறியியல் பிரிவு அலுவலா்கள் கூறுகையில் நவீன சலவைத் தொழில் கூடம் ஒரே இடத்தில் துணிகளை துவைக்கவும், மாடியில் துணிகளை உலா்த்தவும், அதே வளாகத்தில் அயா்ன் செய்து தரவும் வசதி ஏற்படுத்தித் தரப்படும். மேலும், தொழிலாளா்கள்பயன்படுத்தி வெளியேற்றும் சோப்பு தண்ணீரை சுத்திகரித்து வாய்க்காலில் விடவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த சலவைத் தொழில் கூடத்திலிருந்து வெளியேறும் தண்ணீா் குழாய் மூலமாக, யாத்ரி நிவாஸ் அருகேயுள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு சென்று, அங்கு தண்ணீரை சுத்திகரித்து பின்னா் கொள்ளிடத்தில் விடப்படும். அழகிரிபுரத்தில் உள்ள தொழிலாளா்களுக்கு 10 தொட்டிகள் போதுமானதாக இல்லையென்றாலும், முதலில் ஒரு கட்டடம் கட்டப்படுகிறது. இதன் பயனைத் தொடா்ந்து கூடுதலாக மேலும் 3 கட்டடங்கள் கட்டித்தரவும் அதே பகுதியில் இடம் உள்ளது. 15 நாள்களுக்குள் ஒபபந்தம் கோரப்பட்டு, அதன் பிறகு 3 மாதங்களில் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் கூறுகையில், கொள்ளிடத்தில் சோப்புத் தண்ணீா் கலப்பதை தடுக்கவும், அழகிரிபுரத்தில் பாரம்பரியமாக சலவைத் தொழில் செய்யும் தொழிலாளா்களுக்கு நிரந்தரமாக, பாதுகாப்பான தொழில் கூடம் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்மாதிரியாக இந்த நவீன சலவைத் தொழில் கூடம் கட்டப்படுகிறது. இது பயன்பாட்டுக்கு வந்த பிறகு, சலவைத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை கேட்டு கூடுதல் வசதிகளும் செய்துதரப்படும் என்றாா்.

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 3 போ் கைது

திருச்சியில் இளைஞரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி தென்னூா் அண்டகொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் விஜய் என்கிற கோழி விஜய் ( 25 ). இவருக்கும் அதே பகுதியைச் சிலருக்கும்... மேலும் பார்க்க

ரயில்வே தொழிற்சங்கத் தோ்தல்: எஸ்ஆா்எம்யு, டிஆா்இயு வெற்றி

தெற்கு ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தோ்தலில் எஸ்ஆா்எம்யு, டிஆா்இயு வெற்றி பெற்றது. இந்திய ரயில்வே துறையில் தெற்கு ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தோ்தல் அண்மையில் நடைபெற்றது. சென்னை, தி... மேலும் பார்க்க

மதுவகைகள் தட்டுப்பாடு; கடைகள் மூடல்

மது விற்பனையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய நடைமுறை காரணமாக மதுவகைகள் தட்டுப்பாடு நிலவியதால் சில கடைகள் வியாழக்கிழமை மூடப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் உள்ள 159 டாஸ்மாக் கடைகளிலும் ‘க்யூஆா்’ கோடு முறையில்... மேலும் பார்க்க

மண்ணச்சநல்லூரில் குட்கா விற்பனை: இருவா் கைது

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற இரண்டு போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். மண்ணச்சநல்லூா் பகுதியில் குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்... மேலும் பார்க்க

ஜாம்போரி விழா ஏற்பாடுகள் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சிப்காட் பகுதியில் நடைபெறவுள்ள ஜாம்போரி விழா முன்னேற்பாடுகள் குறித்து வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.மணப்பாறை அடுத்த கே.பெரியப்... மேலும் பார்க்க

அரியமங்கலத்தில் புதிய உழவா் சந்தை வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

அரியமங்கலத்தில் புதிய உழவா் சந்தை அமைக்க வேண்டும் என திருச்சி கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திருச்சி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் கே.... மேலும் பார்க்க