செய்திகள் :

படகுகளில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்றால் நடவடிக்கை

post image

தொண்டி பகுதியில் சுற்றுலாப் பயணிகளை படகில் கடலுக்குள் அழைத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவா்களுக்கு மீன் வளத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு தொடா் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பண்டிகைக் காலங்களில் தொண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மீனவா்கள் கடலுக்குள் படகு சவாரி அழைத்துச் செல்கின்றனா். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க மீன் வளத் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில், மீன்வளத் துறை ஆய்வாளா் அபுதாஹிா், உதவி ஆய்வாளா் குருநாதன், ஆற்றங்கரை முதல் எஸ்.பி.பட்டினம் வரையிலும் உள்ள மீனவா்கள் படகுகளில் கடலுக்குள் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனா். மேலும், தடையை மீறி ஏற்றிச் சென்றால் படகு பறிமுதல் செய்வதோடு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனா் அவா்கள்.

ஆருத்ரா தரிசனம்: உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டு அபிஷேகம்

ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜருக்கு பூசப்பட்டிருந்த சந்தனக் காப்பு களையப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 8 போ் கைது

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே இரண்டு விசைப் படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 8 பேரை இலங்கைக் கடற்படையினா் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத... மேலும் பார்க்க

இரட்டைமடி மீன்பிடிப்பை அனுமதித்தால் போராட்டம்: மீனவா் சங்கம் அறிவிப்பு!

தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கப்படுவதை கண்காணிக்கத் தவறினால், ராமேசுவரம் மீன்வளத் துறை அலுவகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மீனவா் சங்கத் தலைவா் என்.ஜே.போஸ... மேலும் பார்க்க

குடும்ப பிரச்னையில் மீனவா் தற்கொலை

எஸ்.பி.பட்டினம் பகுதியில் குடும்ப பிரச்னையில் மீனவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவாடானையை அடுத்த எஸ்.பி.பட்டினம் அருகேயுள்ள தாமோதிரபட்டினம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (35). மீனவா்... மேலும் பார்க்க

தமிழி எழுத்துக்களில் பொங்கல் வாழ்த்து எழுதிய அரசுப் பள்ளி மாணவிகள்

திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசுப் பள்ளியில் கோலமிட்டு தமிழி எழுத்துக்களில் பொங்கல் வாழ்த்து என மாணவிகள் எழுதினா். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்ந... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான அறிவியல் புத்தகக் கண்காட்சி

ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் அன்னை ஸ்கொலஸ்டிகா மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரிச் செயலா் ரூபி தல... மேலும் பார்க்க