முதியவரிடம் ரூ.3 கோடி மோசடி; மகளிர் சுய உதவிக்குழு தலைவியின் மாஸ்டர் பிளான்; சிக...
TNPSC: தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு; என்ன தகுதி? எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
கணக்கு அலுவலர், வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்), உதவி மேலாளர் (கணக்கு), உதவி மேலாளர் (சட்டம்), முதுநிலை கணக்கு அலுவலர் உள்ளிட்ட 14 பணிகள்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 76
வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பைக் கீழே தெரிந்துகொள்ளுங்கள். (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு (பக்கம் 6))

கல்வித் தகுதி: ஒவ்வொரு பதவிக்கு ஏற்ப கல்வியும், அனுபவமும் மாறுபடுகிறது (பக்கம் 7 - 8)
குறிப்பு: விண்ணப்பதாரர்களுக்குக் கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
எழுத்துத் தேர்வு, நேர்காணல்.
எழுத்துத் தேர்வு தேதி: மார்ச் 7, 8, 2026.
விண்ணப்பிக்கும் இணையதளம்:apply.tnpscexams.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 20, 2026
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!


















