கோத்தகிரி: அனுமதியின்றி கிணறு தோண்டிய காட்டேஜ் நிர்வாகம்; மண்ணில் புதைந்து தொழி...
சேலம்: லாரி மீது அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து; டிரைவர் பலி
சேலம் மாநகரப் பகுதியில் இருந்து ஓமலூருக்கு பாரம் ஏற்றிச் சென்ற லாரி திடீரென டீசல் இல்லாததால், மாமாங்கம் சாலையிலேயே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து தர்மபுரி நோக்கி நெய் எடுத்துக்கொண்டு சென்ற ஈச்சர் லாரி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதி சேர்ந்த ஈச்சர் லாரி ஓட்டுனர் கோபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், பின்னால் வந்துகொண்டிருந்த சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து ஈச்சர் லாரிமீது மோதி திடீரென தீப்பிடித்து. இதனால் சுற்றுலா வேன் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் சுற்றுலா வேன் டிரைவர் லேசான காயத்துடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சுற்றுலா வேனில் இருந்த 15 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுதொடர்பாக சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிமீது அடுத்தடுத்த வாகனம் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




















