செய்திகள் :

பட்டினிச் சாவு இல்லாத மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

post image

சென்னை: பட்டினிச் சாவு இல்லாத மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது என தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு நாட்டின் இரண்டாவது வளர்ந்த பொருளாதார மாநிலமாக இருக்கிறது என கூறினார்.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இறுதி நாளான சனிக்கிழமை(ஜன.11) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

பட்டினிச் சாவு இல்லாத மாநிலம் தமிழ்நாடு

அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், பட்டினிச் சாவு இல்லாத மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது.

தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 சதவிகிதமாக இருந்த தமிழ்நாட்டின் பங்கு, கடந்த நான்கு ஆண்டுகளில் 9.21 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. பொருளாதார குறியீடுகள் அனைத்திலும் தமிழ்நாடு வளர்ச்சியை எட்டியிருக்கிறது.

வறுமைக் குறியீடுகளில் நாட்டின் சராசரி சதவிகிதம் என்பது 14.96-ஆக இருக்கும்போது தமிழ்நாட்டின் சராசரி 2.2 சதவிகிதமாக இருக்கிறது.

41 சதவிகித பெண் தொழில் பணியாளர்கள்

நாட்டின் மொத்த பெண் தொழில் பணியாளர்களில் 41 சதவிகிதம் பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கு மேலான தனியார் முதலீட்டுத் திட்டங்கள் வருவது உறுதி செய்யப்பட்டடுள்ளது. நாட்டிலேயே தொழில் நிறுவனங்கள் பெருகியதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருக்கிறது.

மத்திய அரசு முதல் பரிசு வழங்கிப் பாராட்டு

தில்லியில் இருக்கின்ற தேசிய கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின்கீழ் அதிக எண்ணிக்கையிலான சேமிப்புக் கிடங்குகளைப் பதிவு செய்ததற்காகத் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்துக்கு மத்திய அரசு முதல் பரிசு வழங்கிப் பாராட்டியிருக்கிறது.

இதையும் படிக்க |திட்டமிட்டு ஆளுநர் விதிமீறலில் ஈடுபட்டார்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டு பணவீக்கம் குறைந்திருக்கிறது

நாடு முழுவதுமான பணவீக்கம் அதிகமாகியிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு மட்டுமான பணவீக்கம் குறைந்திருக்கிறது. இதுதான் ‘திராவிட மாடலின்’ சாதனை. "தொழில்கள் வளர்கின்றன; புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகின்றன, இதனால் தொழிலாளர்களுக்கு என்ன பயன்?" என்று சிலர் கேட்கலாம். புதிய தொழில் நிறுவனங்கள் வருகின்றதென்று சொன்னால், ஏதோ தனியார் முதலாளிகள் மட்டும் வளமடைகிறார்கள் என்று பொருளில்லை. அந்த நிறுவனங்கள் மூலமாக மாநிலம் வளர்கிறது, கிடைக்கும் வேலைவாய்ப்புகளின் மூலமாக லட்சக்கணக்கான குடும்பங்களும் வளர்கின்றன, வாழ்கின்றன, இதை மனதில்கொள்ளவேண்டும்.

39 ஆயிரத்து 666 தொழிற்சாலைகள்

தமிழ்நாட்டில் 39 ஆயிரத்து 666 தொழிற்சாலைகள் இருக்கின்றன. குஜராத்தில் 31 ஆயிரத்து 31 தொழிற்சாலைகளும், மகாராஷ்டிராவில் 26 ஆயிரத்து

446 தொழிற்சாலைகளும் இருக்கின்றன. மனித வளத்தை வளர்ப்பதில் மகாராஷ்டிரம், குஜராத்தைவிட தமிழ்நாடு சாதனை படைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் 39 ஆயிரத்து 699 சிறு, குறு தொழில்கள் இருக்கின்றன. இதன் மூலம் 4 லட்சத்து 81 ஆயிரத்து 807 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

வேலை வாய்ப்புகளை வழங்குவதில் முதலிடம்

கரோனா தொற்றுக் காலத்தில் வேலை வாய்ப்புகள் குறைந்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனை சீர்படுத்தியிருக்கின்றோம். இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி 8 லட்சத்து 42 ஆயிரத்து 720 மனித உழைப்பு நாள்களுடன் தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றிருக்கிறது என கூறினார்.

கத்தார் கவிஞர் முகம்மது அல் அஜாமி! கவிதைதான் குற்றம் - 11

நாடு: கத்தார்! உலகின் தனிநபர் பணக்கார நாடுகளில் ஒன்று. மக்கள் தொகை 2.2 மில்லியன்; ஆனால் குடிமக்கள் (citizens) 250,000 பேர் மட்டுமே! தோராயமாக 8 க்கு ஒருவர் மட்டுமே குடிமகன்/ குடிமகள்! இவர்களில் பாதிப் ... மேலும் பார்க்க

ரூ.3 கோடி மதிப்பிலான காண்டாமிருகக் கொம்புகள் பறிமுதல்! 4 பேர் கைது!

புது தில்லியில் காண்டாமிருகத்தின் கொம்புகளை பதுக்கிய 4 பேர் அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.அம்மாநிலக் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் கடந்த ஜன.9 அன்று லாக்பட் ... மேலும் பார்க்க

முதல்முறையாக சிங்கப்பூர் அதிபர் இந்தியா வருகை!

கடந்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூர் நாட்டு அதிபர் முதல்முறையாக அரசுப்பயணமாக இந்தியா வருகிறார்.தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் வருகின்ற ஜன.14 அன்று அரசு முறைப்பயணமாக இந்தி... மேலும் பார்க்க

துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்! படுகாயமடைந்த சிறுவன்!

புது தில்லியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 15 வயது சிறுவன் படுகாயம் அடைந்துள்ளார்.வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியின் பி-ப்ளாக்கில் உள்ள தனது வீட்டின் வாசலில் நேற்று (ஜன.... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு லட்சத்து எட்டாயிரத்து நூற்றைந்து போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 200 நாள்கள் ... மேலும் பார்க்க

கிராமவாசிகள் நோய்வாய்ப்பட தடை! எங்கு?

இத்தாலி நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள பெல்காஸ்ட்ரோ எனும் கிராமத்தில் உள்ளூர் மக்கள் நோய்வாய்ப்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கட்டன்சாரோ மாகாணத்திலுள்ள பெல்காஸ்ட்ரோ எனும் கிராமத்தின் மேயர் அண்ட... மேலும் பார்க்க