செய்திகள் :

"பட்டியல் சமூக மக்களின் பிரச்சினைகளுக்கு செவி கொடுக்க மறுக்கிறது தமிழக அரசு"- பா.ரஞ்சித் காட்டம்

post image

மானாமதுரையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர், காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் இந்தச் சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "மானாமதுரையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்ற இளைஞர் காவல்துறையினரால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். கொலை நடந்து மூன்று நாட்கள் ஆகியும் இப்போது வரை சம்மந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருக்கிறது அரசும் காவல்துறையும்.

ஆகாஷ்
ஆகாஷ்

4 ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் என்பது சாதாரணமாக கடந்துபோகக் கூடிய ஒன்றல்ல என மதுரை உயர்நீதிமன்றம் கண்டித்திருந்தது. அதற்குப் பின் இரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், தற்போது ஆகாஷ் என்கிற இளைஞர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருக்கிறது. அதிலும் பட்டியல் சமூக மக்கள் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் அவை இன்னும் அலட்சியமாகக் கையாளப்படுகின்றன.

காவல்துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் பட்டியல் சமூக மக்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லையென்பதாகவே இதை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. காவல்துறையினர் உரிய நடவடிக்கையோ பாதுகாப்போ அளிப்பார்கள் என்கிற நம்பிக்கையை பட்டியல் சமூக மக்கள் இழந்துவருகிறார்கள்.

சமூக இயக்கங்களும் மனித உரிமைச் செயற்பாட்டார்களும் நீதிமன்றங்களும் தொடந்து இதனை கவனப்படுத்தி வருகிறபோதிலும் திமுக அரசு இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த முனைப்பும் இல்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூக - அரசியல் பாதுகாப்பை உறுதி செய்யும் அடிப்படை உரிமைக்காகவே வாக்குரிமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வாக்கரசியலுக்காக கூட பட்டியல் சமூக மக்களின் பிரச்சினைகளுக்கு செவி கொடுக்க மறுக்கிறது தமிழக அரசு.

எல்லா அதிகார மட்டத்திலும் கைவிடப்பட்டவர்களாகவே பட்டியல் சமூக மக்களின் நிலை இருக்கிறது. “அரசியலில் நாம் ‘ஒரு மனிதன் – ஒரு ஓட்டு – ஒரு மதிப்பு’ என்ற சமத்துவத்தை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், சமூகமும் பொருளாதாரமும் சமத்துவமற்றதாகவே இருந்தால், இந்த ஜனநாயகம் நீண்ட காலம் நிலைக்காது” என வலியுறுத்தியவர் பாபாசாகேப் அம்பேத்கர்.

 பா. ரஞ்சித்
பா. ரஞ்சித்

இன்று பட்டியல் சமூக மக்களின் உயிர் பாதுகாப்பே உறுதி செய்யப்படாத நிலையில், இந்த எச்சரிக்கை இன்னும் தீவிரமான அரசியல் கேள்வியாக மாறியுள்ளது. ஆகாஷ் கொலை வழக்கில் உடனடி நடவடிக்கை எடுத்து, நீதியை உறுதி செய்ய தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். எந்த மக்களின் பிரச்சினைகளை பேச பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்களோ அந்தப் பிரச்சினையை பேசாத பட்டியல் சமூகப் பிரதிநிதிகள் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். பட்டியல் சமூக மக்கள் தம் உரிமைகளை வென்றெடுக்க முன்னெப்போதையும் விட அணியமாக வேண்டிய தேவையும் இருக்கிறது, அதுவே இந்நிலையை மாற்றும்" என்று தெரிவித்திருக்கிறார்.

திமுக-வின் `தொகுதி குறைப்பு நடவடிக்கை' - அப்செட்டில் கூட்டணி கட்சிகள்; புதிய யுக்தியுடன் அறிவாலயம்!

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்யாமல் இருப்பதால், அதை இறுதி செய்யும் வேலையை தி.மு.க தலைமை கையில் எடுத்துள்ளது.ஆனால், தாங்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கை... மேலும் பார்க்க

"தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரபலமாவதால் திமுக அதிர்ச்சி அடைந்து வருகிறது"- பிரதமர் மோடி

"தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரபலமாவதால் திமுக அதிர்ச்சி அடைந்து வருகிறது" என்று மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். பிரதமர் மோடி 2026 தேர்தலை முன்னிட்டு மூன்றாவது முறையாக தமிழகம் வர இருக்... மேலும் பார்க்க

ஆளுநர் மாற்றம்... குடியரசுத் தலைவர் அதிருப்தி - மேற்கு வங்கத்தில் சுழன்றடிக்கும் `அரசியல் புயல்!'

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வ தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும் மேற்குறிப்ப... மேலும் பார்க்க

'உங்க எல்லாரையும் எம்.எல்.ஏ-வா பார்க்கணும்!' - விஜய் `அறிவித்த' 60 வேட்பாளர்கள்?! - முழு விவரம்!

விஜய்யிடம் பாஜக கூட்டணிக்காக பேசிக்கொண்டிருக்கிறது என்கிற தகவல் அரசியல் புயலை கிளப்பியிருக்கும் சூழலில், தவெக சார்பில் முதற்கட்டமாக 60 வேட்பாளர்களை நேரில் அழைத்து, 'நீங்கள்தான் கேண்டிடேட். தொகுதியில் ... மேலும் பார்க்க

`தவெக-வுடன் கூட்டணியா? டீயும் காபியும் எப்போதும் ஒன்று சேராது..!' - அண்ணாமலை பதில்

அதிமுக- பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம், இத... மேலும் பார்க்க

`என்.டி.ஏ கூட்டணியில் தவெக-வா?' - செய்தியாளர்களின் கேள்விக்கு சி.டி.ஆர்.நிர்மல் குமார் பதில்!

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. கூட்டணிப் பேச்சுவார்தை தொடங்கி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என, தீயாக இர... மேலும் பார்க்க