செய்திகள் :

பரமக்குடி: சவடு மண் வியாபாரியிடம் ரூ. 50 ஆயிரம் லஞ்சம்; வருவாய் கோட்டாட்சியர் சிக்கியது எப்படி?

post image

பரமக்குடி அருகே உள்ள செல்லூரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் பரமக்குடி பகுதியில் சவடு மண் விற்பனை செய்து வருகிறார். இதற்கான அனுமதியினை மாதம் தோறும் பரமக்குடியில் உள்ள வருவாய் கோட்டாட்சியரிடம் பெற வேண்டும்.

இந்த அனுமதியைப் பெற பிரபாகரன், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவண பெருமாளை அனுகியுள்ளார். அப்போது சரவண பெருமாள் சவடு மண் எடுக்கும் அனுமதியை வழங்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

லஞ்சம் வாங்கிய கோட்டாட்சியர் சரவண பெருமாள்
லஞ்சம் வாங்கிய கோட்டாட்சியர் சரவண பெருமாள்

இது குறித்து பிரபாகரன் ராமநாதபுரம் லஞ்சம் ஒழிப்பு போலீஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்களின் ஆலோசனைபடி பிரபாகரன் பரமக்குடியில் உள்ள கோட்டாட்சியரின் வீட்டிற்குச் சென்று ரசாயனப் பொடி தடவிய ரூபாயினை கோட்டாட்சியர் சரவரண பெருமாளிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் லஞ்சம் வாங்கிய சரவண பெருமாளைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.

இதனை தொடர்ந்து கோட்டாட்சியர் சரவண பெருமாள் பரமக்குடியில் தங்கியிருந்த வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது அவரது வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ. 5 லட்சத்து 55 ஆயிரம் சிக்கியது.

இது தொடர்பாக லஞ்சம் பெற்ற கோட்டாட்சியர் சரவண பெருமாளையும், இதற்கு உதவியாக இருந்த கோட்டாட்சியரின் வாகன ஓட்டுநர் சுந்தர் என்பவரையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

வருவாய் கோட்டாட்சியர் இல்லம்
வருவாய் கோட்டாட்சியர் இல்லம்

மேலும் மதுரையில் உள்ள கோட்டாட்சியர் சரவண பெருமாளின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். மாநிலத்தில் லஞ்சம் ஊழல் இல்லா ஆட்சி நடப்பதாக முதல்வர் ஜோசப் விஜய் ஒவ்வொரு முறையும் கூறி வரும் நிலையில் உயர் பதவி வகிக்கும் கோட்டாட்சியர் ஒருவரே லஞ்ச வழக்கில் சிக்கியிருப்பது மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்தமுறை உங்களிடம் ரூ.50 லட்சம் திருடினோம், மீண்டும் வருவோம்: வழக்கறிஞரிடம் ரூ.3.15 கோடி கொள்ளை

ஹரியானா மாநிலம் குருஷேத்ராவை சேர்ந்தவர் பல்வந்த் சிங் வாலியா. மூத்த வழக்கறிஞரான பல்வந்த் சிங் இரவு 9 மணிக்கு தனது நாயை நடைபயிற்சிக்கு வெளியில் அழைத்து சென்றார். வீட்டில் அவரது மனைவி மட்டும் இருந்தார்.... மேலும் பார்க்க

கொலை செய்வதை வீடியோ எடுத்த இளைஞர்கள்; ரத்தம் வடிந்த கத்தியை வாயில் வைத்து செல்ஃபி - கோவை அதிர்ச்சி!

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள சுலபம்பாளையம் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (22). இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் விஷ்ணு (19) என்பவருடன் மது குடித்துள்ளார். பின்னர் இருவரும் சி... மேலும் பார்க்க

தூத்துக்குடி டு இலங்கை; கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான வெள்ளாடுகள், புறாக்கள் பறிமுதல்!

தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலைகள், சங்குகள், மஞ்சள், கடல் அட்டைகள், வலி நிவாரணி மாத்திரைகள், போதை மாத்திரைகள், போதையேற்றும் பொடிகள், கஞ்சா ஆகியவை கடத்தப்படுவ... மேலும் பார்க்க

15 வயது சிறுவன்: விளையாடும்போதே சுருண்டு விழுந்து உயிரிழப்பு - அதிர்ச்சி

கர்நாடக மாநிலம் தக்ஷிணா கன்னடா மாவட்டம் சுராத்கல் அருகே உள்ள சுரிஞ்சே கிராமத்தைச் சேர்ந்தவர் லிகித் அமீன். 15 வயதான இவர்10-ம் வகுப்பு படித்து வந்தார். புதன்கிழமை (ஆகஸ்ட் 5) தனது நண்பர்களுடன் வாலிபால் ... மேலும் பார்க்க

`நான் உனது பாஸ்' எனக்கூறி பெண் பாலியல் வன்கொடுமை: தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறை

தெஹல்கா பத்திரிகை நிறுவனரும் ஆசிரியருமான தருண் தேஜ்பால் 2013ம் ஆண்டு அந்த இதழ் ஏற்பாடு செய்திருந்த 'திங்க்ஃபெஸ்ட்' நிகழ்வின்போது, ​​கோவாவில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் வைத்து, நவம்பர் 7 மற்றும் 8 ஆ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: காணாமல் போன 40 பவுன் நகை; காட்டிக் கொடுத்த அடகுக்கடை சி.சி.டி.வி - என்ன நடந்தது?

புதுக்கோட்டை மாவட்டம், கீமங்கலம் காவல் சரகம் கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர், சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லதா, 2 குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வர... மேலும் பார்க்க