செய்திகள் :

பரமத்திவேலுார் அரசு மருத்துவமனை: ரூ. 6 கோடி மதிப்புள்ள கட்டடம் எப்போது திறக்கப்படும்?- மக்கள் கேள்வி

post image

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பாலப்பட்டி, நன்செய் இடையார், பரமத்திவேலுார், பரமத்தி, கந்தம்பாளையம், கபிலர்மலை, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, ஜேடர்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

தாலுகா தலைமை மருத்துவமனையாகச் செயல்படுவதால் நாள்தோறும் 500- க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வருகின்றனர். 80-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.

இங்கு, விபத்து அவசர சிகிச்சை, குழந்தைகள் நலம், பல் மற்றும் சிறப்பு சிகிச்சை, எலும்பு முறிவு, கண் மருத்துவம், காசநோய், ரத்த வங்கி, பொது மருத்துவம், 24 மணி நேர தாய் சேய் நல சிகிச்சை, பச்சிலம் குழந்தை கவனிப்பு, எக்ஸ்ரே, ஸ்கேன், காது மூக்கு, தொண்டை, இ.சி.ஜி., சித்த மருத்துவம், அறுவை சிகிச்சை, குடும்பம் நலம் உள்ளிட்ட 28 பிரிவுகள் உள்ளன.

பரமத்திவேலுார் அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் நாள் அதிகரித்து வருவதால் இடம் பற்றாக்குறையால் இங்கு முதலுதவி சிகிச்சை மட்டும் பெற்றுக்கொண்டு தீவிர சிகிச்சைக்கு நாமக்கல் மற்றும் கரூர் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் நிலை உள்ளது.

ஒரு சில வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். இந்நிலையில், அரசு தலைமை மருத்துவமனையை விரிவுபடுத்த கோரிக்கை எழுந்தது. கடந்த தி.மு.க ஆட்சியின்போது சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஒப்புதலின் பேரில், பொதுப்பணித்துறை சார்பில் பரமத்திவேலுார் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 50 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டும் பணி ரூ. 20 கோடி மதிப்பீட்டில் 2024, அக்டோபரில் தொடங்கப்பட்டது.

பணிகள் தொடங்கப்பட்டபோதே 2025-க்குள் கட்டடம் கட்டும் பணிகள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. தற்போது, பரமத்திவேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்டிப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்
தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்

புதிய கட்டடம் 4 தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் பொதுமக்கள் காத்திருப்பு அறை, காவல்துறை விசாரணை அறை, சி.டி. ஸ்கேன் அறை, விபத்தில் சிக்கிய நபர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் நோயாளிகள் அறையும், முதல் தளத்தில் அறுவை சிகிச்சை, ஊசி போடும் அறை, நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் கொடுக்கும் அறையும், இரண்டாவது தளத்தில் அறுவை சிகிச்சை அறை, தீவிர சிகிச்சை பிரிவும், அறுவை சிகிச்சைக்குப் பின் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்நோயாளியாக படுக்கை வசதியுடன் சிகிச்சை பெறும் வசதியும்,

நான்காவது தளத்தில் டயாலிசிஸ் வார்டு, ரத்த பரிசோதனை அறையும் மேலும் நோயாளிகள் பயன்படுத்திக்கொள்ள லிப்ட் வசதியுடன் கட்டி முடிக்கப்பட்டது. தற்போது கட்டடப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழா காணாமல் உள்ளது.

"விரைவில் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வாங்க" என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

``வாக்காளர் அட்டை, ஆதார், பான் கார்டெல்லாம் குடியுரிமைக்கான சான்று அல்ல"- கல்கத்தா உயர் நீதிமன்றம்

வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் மற்றும் பான் (PAN) அட்டைகள் ஆகியவை இந்தியக் குடியுரிமைக்கான உறுதியான சான்றுகள் அல்ல என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேற்கு வங்கத்தில் நடந்த வாக்காளர் தீ... மேலும் பார்க்க

"நாங்கள் இருப்பதே வாடகை வீடு; என் குடும்பத்தில் யாரிடமும் ரூ.2 கோடி இல்லை..!"- அமைச்சர் ரமேஷ்

கடந்த ஜூலை 25ம் தேதி அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்றிருந்தார். அப்போது கிழக்கு கோபுரத்தில் ஷூ அணிந்தபடி அவர் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சை... மேலும் பார்க்க

திருச்சி: 'குடிநீர் விநியோகத்தை தனியார்மயமாக்கக் கூடாது!' - கோரிக்கை முன்வைக்கும் சமூக ஆர்வலர்கள்

தமிழ்நாட்டில் குடிநீர் விநியோகத்தை தனியார்மயமாக்க முன்மொழியப்பட்ட திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, எக்ஸ்னோரா, மக்கள் சக்தி இயக்கம், தண்ண... மேலும் பார்க்க

`முதல்வர் எங்களை கடிந்துகொண்டாலும் தவறில்லை.. அமைச்சர்களுக்கு அவர்தானே லீடர்!' - அமைச்சர் வன்னிஅரசு

நெல்லையில் ஆணவப் படுகொலைக்குப் பலியான கவினின் முதல் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு, 'ஆணவப் படுகொலை தடுப்பு சட்டம் நிறைவேற்றப்படும்' என உறுதிபட கூறியிருக்கிறார... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்! - DVAC-ன் குற்றச்சாட்டு என்ன?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் நேற்று (ஜூலை 29) லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்... மேலும் பார்க்க

ராகுல் vs அமித் ஷா: 'மாணவர்கள் மீதான வன்முறைக்கு அமித் ஷாதான் காரணமா?' - நாடாளுமன்றத்தில் காரசாரம்

நேற்று (ஜூலை 29) நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி vs மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எனக் காரசார விவாதம் சென்றது. ராகுல் காந்தி vs அமித் ஷா வினாத்தாள் கசிவு சம்பந்தமாக டெல... மேலும் பார்க்க