செய்திகள் :

"’பரிதாபங்கள்’ ட்ரோல் காயப்படுத்துச்சு; ஆனா..." - விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மகன் அக்ஷய்

post image

’சட்டமன்றத்தின் கதவுகளைப் பூட்டுவதாகச் சொல்கிறார்கள், பூட்டிப் பாருங்கள், உங்களது எலும்பை உடைக்கறோம்’ எனப் பொது மேடையில் முதல்வர் விஜய் குறித்து பேசிய விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு இன்னும் ஜாமின் கிடைக்கவில்லை.

திங்கட்கிழமை வழக்கு விசாரணைக்கு வருவதாகச் சொல்கிறார்கள்.

தனது தந்தையைக் கைது செய்ததில் சட்டவிதிகள் பின்பற்றப்படவில்லை என அவரது மகன் அக்‌ஷய் பேசியிருந்ததை ட்ரோல் செய்து வீடியோ வெளியிட்ட பரிதாபங்கள் யூடியூப் டீமானது திமுகவின் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோரின் கண்டனங்களுக்குப் பிறகு வீடியோவை டெலீட் செய்து வருத்தமும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அக்‌ஷயிடம் பேசினோம்.

சட்டக்கல்லூரி மாணவர் அக்‌ஷய்
சட்டக்கல்லூரி மாணவர் அக்‌ஷய்

‘’பரிதாபங்கள் டீமுடைய எத்தனையோ வீடியோக்களை இதுக்கு முன்னாடி பார்த்து நானே ரசிசிருக்கேன். நானே அவங்க ரசிகன்தான். அன்னைக்கு என்னை ட்ரோல் செய்திருந்ததையும் பார்த்தேன். நான் சட்டம் படிச்ச மாணவன். சட்டப்பிரிவுகள் எனக்கு நல்லாவே தெரியும்.

ஒருத்தர் கால் ஊனமுற்றவரா இருந்தா அதை வார்த்தைகளால் குறிப்பிடறது மாதிரிதான் அவருடைய நடையை நடந்து காட்டுவதும். அதுவும் உருவக்கேலிதான். உதாரணத்துக்கு இதைச் சொல்றேன். அதேபோலத்தான் ஒருவருடைய குரல் சரியில்லைனா அதைச் சுட்டிக்காட்டி அவர் பேசுவது போலவே பேசி கலாய்ப்பதும் தப்புதான்.

அந்த வீடியோவைப் பார்த்ததும் செக்‌ஷனைச் சொல்லி அவங்களுக்கு சட்ட நோட்டிஸ் அனுப்பி இருக்கவும் என்னால் முடியும். ஆனா நான் அதைப் பண்ணலை. முதல்ல கொஞ்சம் ஹர்ட்டா இருந்தது.

பரிதாபங்கள்: கோபி - சுதாகர்
பரிதாபங்கள்: கோபி - சுதாகர்

பிறகு அவங்க சுதந்திரம்னு நினைச்சு செய்றாங்கனு விட்டுட்டேன். பிறகு ராஜா சார் கருத்தையெல்லாம் பார்த்தேன். அது அவங்களுடைய ஆதங்கம். வீடியோவை எடுத்துட்டதாகவும் கேள்விப்பட்டேன். ஆனா யாரும் எங்கிட்டப் பேசலை.

எனக்கு இப்பவும் ஒரேயொரு ஆதங்கம்தான். நான் மனவலியோட பேசிட்டிருந்ததை எடுத்து ட்ரோல் செய்த பரிதாபங்கள் டீமின் செயலையே நான் சீரியஸா எடுத்துக்கல. பெருந்தன்மையோட விட்டுட்டேன். ஆனா எல்லாருக்குமான முதல்வர் சக சட்டமன்ற உறுப்பினர் பேசியதை, அதுவும் சட்டமன்றத்தைப் பூட்டுவோம்னு சொன்னதுக்கு மட்டுமேயான எதிர்வினைப் பேச்சை பெருந்தன்மையோட ஏத்துக்காம கைது வரை போயிருக்க வேண்டியதில்லை. பார்க்கலாம், திங்கட்கிழமை அப்பாவுக்கு ஜாமின் கிடைச்சிடும்னு நம்புறோம்" என்றார் அக்‌ஷய்.  

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க