செய்திகள் :

"பலமுறை அழுதிருக்கிறேன்; சினிமா வேண்டாம் என நினைத்திருக்கிறேன்"- ட்ரோல்கள் குறித்து ஸ்ரீலீலா

post image

பவன் கல்யாண் நடிப்பில் உருவான 'உஸ்தாத் பகத் சிங்' திரைப்படம் உகாதி பண்டிகையை முன்னிட்டு கடந்த மார்ச் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஹரிஷ் சங்கர் இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீலீலா நாயகியாக நடித்திருக்கிறார். ராஷி கண்ணா முக்கிய கதாபாத்திரத்திலும், பார்த்திபன் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர்.

 'உஸ்தாத் பகத் சிங்'
'உஸ்தாத் பகத் சிங்'

தமன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் 'உஸ்தாத் பகத் சிங்' படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ரீலீலாவும், ராஷி கண்ணாவும் சோசியல் மீடியா ட்ரோல்கள் குறித்து பேசியிருக்கின்றனர்.

முதலில் பேசிய ஸ்ரீலீலா, “நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் வெளியாகும்போது சமூக வலைதளங்களில் நிறைய நெகட்டிவ் கமென்ட்களும், ட்ரோல்களும் வரும்.

ஆரம்பத்தில் அது மிகவும் மனதை பாதித்திருக்கிறது. பலமுறை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.

ஒருகட்டத்தில் நமக்கு இந்த சினிமா வேண்டாம், மீண்டும் கல்லூரிக்குச் சென்று படிப்பைத் தொடரலாமா?" என்று கூட நினைத்திருக்கிறேன்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்து என்னுடைய வளர்ச்சியை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுகிறேன். இப்போது பாராட்டையும், விமர்சனத்தையும் சமாளிக்க கற்றுக்கொண்டேன்.

தேவையானதை மட்டும் ஏற்றுக்கொள்கிறேன், தேவையற்றதை புறக்கணிக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

ராஷி கண்ணா
ராஷி கண்ணா

தொடர்ந்து பேசிய ராஷி கண்ணா, " இன்றையக் காலகட்டத்தில் ட்ரோலிங் என்பது மிகவும் அதிகமாகியிருக்கிறது.

உண்மை என்னவென்று தெரியாமல் மக்கள் மிக எளிதாக ஒருவரை ஜட்ஜ் செய்துவிடுகிறார்கள். குறிப்பாக வியூஸிற்காகவும் தவறாக ட்ரோல்கள் செய்கின்றனர்" என்று தெரிவித்திருக்கிறார்.

"அப்பாபோல் அரசியலுக்கு வரமாட்டேன்; இயக்குநர் ஆகணுங்கிற ஆசை எனக்கு இருந்ததில்லை..!” - கென் கருணாஸ்

கென் கருணாஸ் 'அசுரன்', 'விடுதலை 2', 'வாத்தி' போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார். இதனிடையே தனுஷின் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். தற்போது 'யூத்' படத்தை இயக்க... மேலும் பார்க்க

நீளிரா: "ஈழம் தொடர்பான கதைகளைச் சொல்லணுங்கிறது என்னுடைய கனவு" - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'நீளிரா' திரைப்படம் வருகிற ஏப்ரல் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நீளிரா படத்தில்...ஈழப் போரை மையப்படுத்திய இத்திரைப்படத்தில் நவீன்... மேலும் பார்க்க

தேன் சுடரே: ''அந்த வார்த்தைக்குப் பெரிய பஞ்சாயத்தாச்சு" - பாடலாசிரியர் மோகன் ராஜன் | வரித்துணையே 11

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகள் குறித்தும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர... மேலும் பார்க்க

Kalidas 2: "இதை நான் சிம்பதிக்குச் சொல்லல; இதுதான் ரியாலிட்டி" - பரத் வருத்தம்

பரத் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'காளிதாஸ்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அப்படத்தைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார்கள். Kalidas 2இயக்குநர் ஶ்ரீ செந்தில... மேலும் பார்க்க

Kalidas 2: "இத்தனை வருடங்கள் நடிக்காமல் இருந்தது ஏன்?'' - பதில் தந்த 'பூவே உனக்காக' சங்கீதா

பரத் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'காளிதாஸ்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அப்படத்தைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார்கள். Kalidas 2இயக்குநர் ஶ்ரீ செந்தில... மேலும் பார்க்க