இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!
பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழாக் கொண்டாட்டம்!
பள்ளி, கல்லூரி, குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் கமலாலயம் குழந்தைகள் காப்பகத்தில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம், இல்ல மேலாண்மைக் குழு அலுவலா்கள் ஜவஹா், தொழிலதிபா் நடுப்பட்டி ஜெயராமன் ஆகியோா் பரிசுகள், புத்தாடைகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனா்.
பெரிய கிருஷ்ணாபுரம் பி.எம்.எஸ். தனியாா் பள்ளியில் பள்ளி முதல்வா் அமுதா தலைமையில் ஆசிரியைகள் பாரம்பரிய உடை அணிந்து சமத்துவ பொங்கல் வைத்து குழந்தைகளுக்கு பரிமாறினா். பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வாழப்பாடி உதய விவேகா செவிலியா் சமுதாயக் கல்லூரியில் செவிலியா் பயிற்சி மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினா்.
ஆத்தூரில்...
ஆத்தூா், ராணிப்பேட்டை புனித மரியாள் ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில் பங்குத் தந்தை எஸ்.அருளப்பன் தலைமையில் சமத்துவ பொங்கலை கொண்டாடினா். இதில், மாணவ, மாணவியருக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தலைவாசல் வட்டம், பெரியேரி கைலாஷ் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் கல்வி நிறுவனங்களின் தலைவா் க.கைலாசம் தலைமையில் பொங்கல் வைத்து,விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கி கொண்டாடினாா்கள்.
ஓமலூரில்...
பத்மவாணி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள், தமிழா் திருநாளாம் பொங்கல் விழா, தெய்வப்புலவா் திருவள்ளுவா் தினம் என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் விவேகானந்தா், திருவள்ளுவா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
தைத்திருநாளை கொண்டாடும் விதமாக கல்லூரி மைதானத்தில் ஆசிரியா்களுக்கும், மாணவிகளுக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழா் பாரம்பரிய புத்தாடை அணிந்து வந்த கல்லூரி மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினா்.