விஜய்யின் தஞ்சை விசிட்; முதல்வர் தலைமையில் அன்பில் இல்ல விழா! - உற்சாகம், அப்செட...
பள்ளி போனதே ஒரு வெற்றி - பசுமையான நினைவுகள்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
ஒரு சிறு கிராமத்தில் பிறந்த ஆண் குழந்தை, அவனது முதல் உலகம் வீடு, இரண்டாம் உலகம் அந்த கிராமம். அச்சிறுவன் இவ்வுலகத்தில் உள்ள இயற்கை மற்றும் மனிதர்களை நேசிக்க ஆரம்பித்தான், கால போக்கில் விளையாட்டு மற்றும் சேட்டை அதிகம் செய்ய ஆரம்பித்து மற்ற பிள்ளைகள் முலமாக தினமும் வீட்டிற்கு பிரச்சினை வர தொடங்கியது! இதனால் மனமுடைந்த அவனது அம்மா ஒரு வயது முதல் ஐந்து வயது வரை படிக்கும் பால்வாடி மழலை பள்ளியில் சேர்க்க முடிவு செய்தாள்.
மறுநாள் அவனை குளிக்க வைத்து பொம்மை டி-சர்ட், ட்ரவுசர் மாட்டி தலைக்கு தேங்காய் எண்ணை தேய்த்து தலைவாரி அழகு படுத்தினாள்! பிறகு கடைக்கு கூட்டி சென்று அவனிடம் கேட்டு பிடித்த கலர் ஸ்லேட் , பல்பம் மற்றும் ஒரு டிபன் பாக்ஸ் வாங்கிக்கொண்டு பால்வாடி மழலை பள்ளிக்கு சென்றார்கள்.அச்சிறுவனை பால்வாடி மழலை பள்ளி ஆசிரியையிடம் விட்டு சென்றாள்.

அப்போது அங்குள்ள சிறுவர்களிடம் சென்று அமர்ந்து கொண்டான், சிறுவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்தனர், ஆசிரியை அவர்களுக்கு தமிழ் உயிரெழுத்துகள்,ஆங்கில எழுத்துகள் சொல்லிக்கொடுத்து ஸ்லேட்டில் எழுத வைத்தாள்! மதிய சத்துணவு கொடுத்து தினமும் மழலை பள்ளி வர உறுதிமொழி எடுக்கவைத்தாள்! அச்சிறுவன் வீட்டிற்கு செல்லும் வழியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை பார்த்தான் அப்போது ஒரு வகை இன்பம் இவன் முகத்தில், இதை பார்த்த ஆசிரியர் ஒருவர் இவனை அழைத்தார் அச்சிறுவனும் சென்றான்.
பள்ளி அருகில் சென்ற சிறுவன் ஆசிரியரை பார்த்து சொல்லுங்க காந்தி தாத்தா என்று சொல்லி பள்ளி உள்ளே நுழைந்தான்! அங்குள்ள மாணவர்கள், சுவரிலுள்ள இயற்கை,கடவுள் வரைபடங்களை பார்த்து திகைத்தான்! உடனே ஆசிரியர் அவனை தூக்கி தன் டேபிளில் அமர வைத்து அவன் மகிழ்ந்த அழகிய முகத்தை ரசித்து செல்லமாக கண்ணத்தை கிள்ளினார்!
ஆசிரியர் அவன் காதோரத்தில் உனக்கு இப்பள்ளிக்கு தினமும் வர விருப்பம் உள்ளதா என்று கேட்டார், அதற்கு அவன் இப்பொழுது சேர்த்துக்கொள்ளுங்கள் என்றான்! அதை கேட்டு மகிழ்ந்த ஆசிரியர் அச்சிறுவனிடம் உன் வலதுகை எடுத்து தலை மேல் வழியாக இடது காதை தொடு என்றார்! முயற்சி செய்த சிறுவனால் தொடமுடியவில்லை, அதை பார்த்த ஆசிரியர் நகைத்து உன்னால் முடியும் வீட்டிற்கு சென்று பயிற்சி எடு என்றார்!

அச்சிறுவனும் தினமும் விளையாடி விட்டு வீட்டிற்கு சென்று கண்ணாடி முன் நின்று தனது வலது கை எடுத்து தலை மேல் புற வழியாக இடது காதை தொட முயன்றான்! இதை பார்த்த அவனது பெற்றோர் சிரித்த முகத்தோடு புரிந்து கொண்டார்கள். இப்படியே 12 மாதங்கள் கடந்தன சிறுவன் முயற்சிக்கு பலன் கிடைத்தது! உடனே அவனது பெற்றோர் இவனை சந்தைக்கு அழைத்து சென்று புதிய சீருடை, பேக், சாக்லேட், ஒரு மரக்கா நெல் வாங்கி கொண்டனர்.
மறுநாள் சிறுவன் சிக்கிரமே குளியல் செய்து சீருடை அணிந்துக்கொண்டான், பின்பு அவன் அம்மா தேங்காய் எண்ணெய்யை தலையில் தேய்த்து தலைவாரி மகனை அழகு படுத்தினாள்! பின்பு அவனது அப்பா பேக், சாக்லேட், ஒரு மரக்கா நெல் எடுத்துக்கொண்டு அவனை கூட்டிக்கொண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்றார்! அப்பள்ளி ஆசிரியருக்கு காலை வணக்கம் சொன்னார்கள், ஆசிரியர் அவர்களை வரவேற்றார்!
அப்பா ஆசிரியரிடம் மகனை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றார், அங்குள்ள மாணவர்கள் நகைத்தனர்!
அப்போது ஆசிரியர் அச்சிறுவனை அழைத்து அவனது வலதுகை எடுத்து தலை மேல் வழியாக இடது காதை தொட சொன்னார், சிறுவன் அதை செவ்வனே செய்து முடித்தான், ஆசிரியரும் அங்குள்ள மாணவர்களும் அவனது முயற்சியை பாராட்டினார்கள்!
பின்பு ஆசிரியர் அச்சிறுவனை அழைத்து மூன்று மத கடவுள் முன்னாடி அமர வைத்து எம்மதமும் சம்மதம் எனக் கூறி நெல் தானியத்தை தரையில் வைத்து தமிழ் உயிரெழுத்துக்களை சிறுவன் வலதுகை பிடித்து வாய் மொழியாகக் கூறி எழுத வைத்தார், சிறுவனுக்கு உணர்வு பூர்வமாக இருந்தது!
சிறுவன் சாக்லேட் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கி தன்னை அறிமுகபடுத்திக் கொண்டான், ஆசிரியர் கொடுத்த புத்தகத்தை மகிழ்ச்சியுடன் பெற்று மாணவர்களுடன் அமர்ந்தான்.
இதைப் பார்த்த அச்சிறுவன் தந்தை மகிழ்ச்சியாக வேலைக்கு சென்றார்! ஆசிரியர் மாணவர்களிடம் புத்தக்கத்தின் முதல் பக்கத்தை திறக்கச் சொன்னார்! அதில் "தீண்டாமை" பற்றிய புரிதலை விளக்கினார்.
அனைத்து மாணவர்களும் முதல் நாள் வகுப்பில் "சாதி மத தீண்டாமை" அறிந்து பள்ளி வந்தத் தற்கான வெற்றியை கண்டனர்.
வெற்றி கதை தொடரும்!!!
இப்படிக்கு
ஆ.வினோத்குமார்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.





















