செய்திகள் :

பழனி கோவிலுக்குச் சொந்தமான நிலத்தைப் பதிவு செய்தது நானா? - சார்பதிவாளர் ஜஸ்டின் சொல்வது என்ன?

post image

பழனி தண்டாயுதபாணி கோவிலுக்குச் சொந்தமான 1 ஏக்கர் 40 செண்ட் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ய முயன்ற வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிமண்டன், நிலத்தை விற்ற முருகதாஸ், வாங்கிய வெள்ளதுரை சேதுபதி ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், மாவட்ட பதிவாளர் சசிகலாவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் சஸெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று மதுரை நீதிமன்ற நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தரப்பில், "ரூ. 100 கோடி மதிப்பு நிலத்தைப் பதிவு செய்யவில்லை. நிலத்தைப் பதிவு செய்தது சார்பதிவாளர் பாலசுந்தர்தான். அந்தப் பத்திரத்துக்கு ஆவண எண் மட்டுமே வழங்கியுள்ளார் ஜஸ்டின் மணிகண்டன் வழங்கியுள்ளார். இதில் பாலசுந்தர் மீது நடவடிக்கை எடுக்காமல் ஜஸ்டின் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.

ஜஸ்டின் மணிகண்டன்
ஜஸ்டின் மணிகண்டன்

தமிழ்நாடு அரசு தரப்பில், "ரூ. 100 கோடி நிலத்தை 2 சார் பதிவாளர்கள் பத்திரப்பதிவு செய்துள்ளனர்" எனத் தெரிவித்தனர்.

இதை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "பத்திரப்பதிவு முடிந்த பிறகு ஆவண எண் மட்டுமே ஜஸ்டின் மணிகண்டனால் வழங்கப்பட்டுள்ளது. 2 சார் பதிவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்? ஆனால் இந்த விவகாரத்தில் ஒரு சார்பாக மட்டுமே நடவடிக்கை எடுதக்கப்பட்டுள்ளது" என கூறிய நீதிபதிகள் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கினர்.

Census Self Enumeration: மக்கள்தொகை கணக்கெடுப்பை நீங்களே ஈசியா செய்யலாம்? எப்படிச் செய்யலாம்?|How to

இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு விரைவில் தொடங்க உள்ளன. இந்த நடைமுறையை எளிதாக்கும் விதமாக மத்திய அரசு 'சுய கணக்கெடுப்பு' என்கிற சிறப்பு வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வசதி மூலம் உங்களுடைய தகவல... மேலும் பார்க்க

"தற்போது குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில்..." - காவலர் தேர்வு தள்ளிவைப்புக்கு உதயநிதி கண்டனம்

தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு தள்ளி வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலினின் பதிவு..."தமிழ்... மேலும் பார்க்க

"பாஜக-வும் திமுக-வும் ஒருபோதும் ஒன்றாக இணைய முடியாது; ஏனென்றால்..." - ஜெயராம் ரமேஷின் விளக்கம் என்ன?

திமுகவும், பாஜகவும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது என்கிற செய்தி தொடர்ந்து அடிபட்டு வருகிறது. காங்கிரஸுடன் கடும் அதிருப்தியில் இருக்கும் திமுக, கடந்த மாதம் டெல்லியில் நடந்த இந்தியாக் கூட... மேலும் பார்க்க

கீழடி: தொல்லியல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தயாரித்த ஆய்வறிக்கை; ASI-யை நாடி வெளியிட தமிழக அரசு முடிவா?

தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தயாரித்துள்ள கீழடி அகழாய்வு இறுதி அறிக்கை மூன்றரை ஆண்டுகளாக வெளியிடப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில், அதை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு இந்தியத் தொல்பொருள் ஆய்... மேலும் பார்க்க

Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்... மேலும் பார்க்க

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது. மேயர்ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,துணைமேயர்வெற்றிச்... மேலும் பார்க்க