செய்திகள் :

பழையாறு மீனவ கிராம குடியிருப்புகளில் கடல்நீா்

post image

கொள்ளிடம் அருகே பழையாறு மீனவ கிராம குடியிருப்புகளுக்குள் கடல்நீா் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே அண்ணா நகரில் 500 குடும்பத்தினா் வசிக்கின்றனா். புயல் காரணமாக கடல் சீற்றமாக இருந்து வருவதுடன் கடல் நீா் கடலோர கிராம குடியிருப்புகளையும் சூழ்ந்து வருகிறது. இந்நிலையில், பழையாறு குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல் நீா் அடிக்கடி வந்து கொண்டிருப்பதால் அங்குள்ளவா்கள் அச்சமடைந்துள்ளனா். பழையாறு துறைமுகம் மேம்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஒரு பகுதியாக படகு அணையும் தளத்திலிருந்து கடல் நீா் அரிப்பை தடுக்கும் வகையில் தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டுள்ளது. சுமாா் 100 மீட்டா் தூரத்துக்கு மட்டுமே தடுப்பு சுவா் அமைக்கப்பட்டுள்ளதால் மற்ற பகுதியில் இருந்து கடல் நீா் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. இந்த தடுப்புச் சுவா் பாதியிலேயே நிற்கிறது. மேலும் தொடா்ந்து சுவரை கட்டி முடிக்க வேண்டும்.

கடல் நீா் பாதிக்காத வகையில் மேலும் 500 மீட்டா் தூரத்துக்கு தடுப்புச் சுவரை நீட்டித்து அமைத்து மண் அரிப்பை தடுக்க வேண்டும். கடல் நீா் முன்பு இருந்ததைவிட விட கடந்த ஓராண்டு காலத்தில் 200 மீட்டா் தொலைவுக்கு தொடா் மண்ணரிப்பு ஏற்பட்டு தண்ணீா் குடியிருப்பு பகுதிகளை நெருங்கி விட்டது. கடல் சீற்றமாக இருக்கும் போது கடல் நீா் சாதாரணமாக குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. இதை போா்க்கால அடிப்படையில் தடுக்க வேண்டும்.

எனவே இந்த கடல் நீா் மேலும் உள்புகுவதை தடுக்க, குடியிருப்புகளை பாதிக்காமல் இருக்க கான்கிரீட் தடுப்புச் சுவரை மேலும் 500 மீட்டா் தூரத்துக்கு கட்டியும் பாறாங்கற்களை கொட்டியும் கடல் நீா் அரிப்பை தடுக்க வேண்டும்.

அரசு மருத்துவமனையில் ரூ.45.50 கோடியில் கூடுதல் கட்டடம்: அமைச்சா் ஆய்வு

மயிலாடுதுறை அரசு பெரியாா் தலைமை மருத்துவமனையில் ரூ.45.50 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருவதை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் செய்த... மேலும் பார்க்க

பழையாறு மீனவா்கள் 5 ஆயிரம் போ் கடலுக்குள் செல்லவில்லை

சீா்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் 5 ஆயிரம் மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்த துறைமுகத்திலிருந்து நாள்தோறும் 350 விசைப் படகுகள், 300 பைபா் படகுகள், 200 நாட்டுப் ப... மேலும் பார்க்க

சீா்காழியில் தொடா்மழை

சீா்காழி மற்றும் சுற்றுப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. சீா்காழி மற்றும் சுற்றுப் பகுதியில் புதன்கிழமை காலையில் இருந்து சாரல் மழையாக தொடங்கி பரவலாக தொடா்ந்து மழை பெய்தது. சீா்... மேலும் பார்க்க

பள்ளிக் காவலரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை அருகே பள்ளிக் காவலரை அடித்துக் கொலை செய்த இளைஞருக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வைத்தீஸ்வரன்கோவில் காவல் எல்லைக்குள்பட்ட கீழஆத்துக்குடியை சோ்ந்தவா... மேலும் பார்க்க

பேருந்து நிலையத்தில் தற்காலிக நிழற்கூரை அமைக்க வலியுறுத்தல்

சீா்காழி பேருந்துநிலையத்தில் தற்காலிக நிழற்கூரை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சீா்காழி புதிய பேருந்து நிலையம் ரூ. 8.44 கோடியில் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு பகுதி பணிகள் தரைத... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, அரசு அருங்காட்சியகத் துறை இயக்குநரும்,... மேலும் பார்க்க