செய்திகள் :

பாகிஸ்தான் பனிச்சரிவு விபத்து: உயிரிழந்த பிரபல மலையேற்ற வீரர்; யார் இந்த நிர்மல் புர்ஜா?

post image

பிரபல மலையேற்ற வீரரான நிர்மல் புர்ஜா பாகிஸ்தானில் உள்ள 'ப்ராட் பீக்' மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் நிர்மல் புர்ஜா உயிரிழந்துவிட்டதாக 'எலைட் எக்ஸ்பெட்' நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

பாகிஸ்தானின் உள்ள அமைந்துள்ள 'ப்ராட் பீக்' சிகரம் உலகின் 12வது மிக உயரமான சிகரம்.

நிர்மல் புர்ஜா
நிர்மல் புர்ஜா

இங்கு நேற்று முன்தினம் (ஜூலை 30) ஏற்பட்ட பயங்கரப் பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ்பெற்ற நேபாள வம்சாவளி மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உள்ளிட்ட 10 சர்வதேச மலையேற்ற வீரர்கள் காணாமல் போயிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில்தான் நிர்மல் புர்ஜா உயிரிழந்துவிட்டதாக அவரது 'எலைட் எக்ஸ்பெட்' நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இவருடன் சேர்த்து மலையேற்ற வீரர்கள் பலரும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புக் குழுவினர் பனிச்சரிவு நடந்த பகுதியில் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

யார் இந்த நிர்மல் புர்ஜா?

நேபாளத்தில் பிறந்தவரான நிர்மல் புர்ஜா, ஆரம்பத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தின் கூர்கா படைப்பிரிவிலும், பின்னர் இங்கிலாந்தின் சிறப்புப் படகுப் படையிலும் (SBS) சேவையாற்றியவர் ஆவார்.

இவர் 2019ஆம் ஆண்டில், உலகிலுள்ள 8,000 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட 14 பிரமாண்ட சிகரங்களை 6 மாத காலத்திற்குள் ஏறி உலக சாதனையைப் படைத்தார்.

நிர்மல் புர்ஜா
நிர்மல் புர்ஜா

இவருடைய இந்தச் சாதனை நெட்பிலிக்ஸின் '14 Peaks: Nothing Is Impossible' என்ற ஆவணப்படமாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

8,000 மீட்டர் உயரமுள்ள அனைத்து 14 சிகரங்களையும் மூன்று முறை ஏறி முடித்த முதல் மனிதர் என்ற புதிய வரலாற்று சாதனையைப் படைக்கும் முயற்சியில் அவர் இந்த மலையேற்றத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல் நிலைய வளாகத்திற்குள் போலீஸ் பைக்குகளுக்கு தீவைப்பு; அறந்தாங்கியில் பரபரப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் பேராவூரணி சாலையில் உள்ள காவல் நிலைய வளாகத்திற்குள் புகுந்து, நள்ளிரவில் 3 பைக்குகளுக்கு மர்ம நபர் தீ வைத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியை... மேலும் பார்க்க

`கணிதம் கடினமல்ல' கற்றலில் விளையாட்டை புகுத்திய இளைஞர்; வெறுப்பை உதறி கணிதத்தை விரும்பும் குழந்தைகள்

“கணிதம் கஷ்டம்… எனக்கு கணிதமே வராது!” — பள்ளி வகுப்பறைகளில் பல குழந்தைகளிடம் இருந்து கேட்கப்படும் வார்த்தைகள் இவை. ஆனால், கணிதத்தைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல; அதை கற்றுக்கொடுக்கும் முறையில்தான் மாற... மேலும் பார்க்க

தரையில் காலெடுத்து வைத்தால் எரியும் உடல்; குளத்திலேயே வசித்துவந்த சிறுவன் - மீட்ட ஆனந்த் அம்பானி!

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் அருகில் உள்ள பெல்தங்கா என்ற இடத்தைச் சேர்ந்த இக்பால் ஷேக் என்ற 16 வயது சிறுவன், கடந்த பல ஆண்டுகளாக தரையில் வாழும் நாட்களை விட அதிகமான நாட்களைக் குளத்து நீரில் கழித்து... மேலும் பார்க்க

1.5 டன் எடை, ரூ.5 லட்சம் விலை - அந்தியூர் கோயில் திருவிழாவில் கவனத்தை ஈர்த்த ஜாஃப்ராபாடி எருமை!

ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கிறது சிறப்பு வாய்ந்த குருநாத் சுவாமி திருக்கோயில். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தேர் திருவி... மேலும் பார்க்க

சாதாரணமாக தொடங்கிய ஒரு நாள் வேலை… முடிவில் கிடைத்தது ₹98 கோடி புதையல் - நடந்தது என்ன?

பெல்ஜியத்தில் பழைய கட்டடம் ஒன்றின் அருகே கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிக்காக நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்த 18 வயது இளைஞருக்கு, சுமார் ₹98 கோடி மதிப்பிலான தங்கப் புதையல் கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற... மேலும் பார்க்க

லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான விருது; ராமநாதபுரம் நகராட்சி சர்ச்சை!

நாட்டின் 80 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது அரசு பணிகளிலும், பொது சேவைகளிலும் சிறந்த பணியாற்றியவர்களுக்கு சிறந்த பணிக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்குவத... மேலும் பார்க்க