சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்
பாகிஸ்தான் வான்வெளியில் இனி விமானங்கள் பறக்க தடையில்லை!
இஸ்லாமாபாத்: போர் நிறுத்தம் எதிரொலியாக பாகிஸ்தானில் நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் சீராகியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி அறிவித்த நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த தடை விதித்து கடந்த 24-ஆம் தேதி அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கையை அறிவித்திருந்தது.
இந்த நிலையில், போர் நிறுத்தம் செய்து கொள்ளலாமென இன்று மாலை அதிரடியாக அறிவித்திருக்கிறது பாகிஸ்தான். இதற்கு இந்தியாவும் சம்மதித்துள்ளதைத் தொடர்ந்து, மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமலாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வான்வெளியில் இனி விமானங்கள் பறக்க தடையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, விரைவில் விமான சேவைகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.