திண்டுக்கல்: பிரபல நகைக்கடையில் ரூ.1.14 கோடி மதிப்பிலான நகைகளை திருடிய ஊழியர்கள்...
"பாஜகவின் 'இந்த' செயல் 'Operation Success Patient Dead' நிலைமை" - ஸ்டாலின் பேச்சு
இன்று திருப்பூரில் ’வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்கிற பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடந்தது.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்டு பேசியதாவது,
"கருப்பு சிவப்பு உடைகளில் இவ்வளவு பெண்களை எங்கேயும் பார்த்திருக்கவே முடியாது. பவர்ஃபுல்லாக இருக்கிறது. வுமன் பவரில் திமுக மீண்டும் பவருக்கு வரப்போகிறது என்பது உறுதியாகி உள்ளது.
தேர்தல் என்று வந்துவிட்டால், திமுகவின் ஹீரோ 'தேர்தல் அறிக்கை'. அந்த ஹீரோவையே தயாரிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் கனிமொழி.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், அவர் செய்த போது நாம் முழுமையான வெற்றி பெற்றோம். ஆக, இந்தத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியைப் பெறப்போகிறோம்.
பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். பெண்களின் வெற்றியே சமூகத்தின் வெற்றி.
பெண்கள் படிக்கக்கூடாது... அடுப்படியைத் தாண்டக்கூடாது... ஆண்களைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்ற அடிமைத்தனத்தை உருவாக்கினார்கள். இவற்றை உடைத்தெறிந்தது திராவிட ஆட்சி தான்.
கடந்த வாரம், ராஜஸ்தானில் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்று சில குழுக்கள் தடைபோட்ட செய்திகள் வந்தன. ஆனால், நம்மூரில் ஆப்பிள் போன் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் அதை அசம்பிள் செய்வதே பெண்கள் தான். திராவிட இயக்கம், நம் தலைவர்களின் முயற்சியே இந்த முன்னேற்றம்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறோம். ஆனால், தேவையில்லாத நிபந்தனைகளுடன் அதை ஒன்றிய அரசு நிறைவேற்றி இருக்கிறது. அது எப்போது அமலுக்கு வரும் என்பதை சொல்ல முடியாது. இது 'ஆபரேஷன் சக்சஸ் பேஷன்ட் டெட்' நிலைமை.“ என்றார்.














