செய்திகள் :

`பாஜக-வின் சர்க்கஸ் யானைபோல தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுகிறார்'- திண்டுக்கல் ஐ.லியோனி

post image

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே திராவிடக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய திண்டுக்கல் லியோனி," மத்திய அரசான, பாஜக அரசுதான் இந்த நீட் தேர்வை கொண்டு வந்தார்கள். அதற்கு முன்னால் இந்த நுழைவுத் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தான்.

அப்படிபட்ட காங்கிரஸ் கட்சிக்கு நாமெல்லாம் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று தி.மு.க -வை எல்லோரும் குற்றம் சாட்டினார்கள். ​ஆனால் அப்படி நாமெல்லாம் தாங்கிப் பிடித்த காங்கிரஸ் கட்சி, இன்று வேறு ஒரு கூட்டணியில் சேர்ந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த நீட் தேர்வை முதன்முதலில் தமிழகத்தில் எழுத வைத்து, நுழைய வைத்தவர் அ.தி.மு.க. -வினுடைய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

நீட் தேர்வு
நீட் தேர்வு

நீட் தேர்வு ஏற்பட்ட முறைக்கேடுகளை கண்டித்ததோடு, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என

இந்தியாவிலேயே முதன்முதலில்குரல் கொடுத்த ஒரே முதலமைச்சர் நம்முடைய மு.க. ஸ்டாலின் என்ற தி.மு.க -வின் தலைவர் தான்.

தேர்தலில் மக்கள் புறக்கணித்தாலும் மக்கள் பிரச்சினைகளுக்காக எப்போதும் திராவிட இயக்கங்கள் மட்டுமே முன்னிற்கும்.

மத்தியில் பிரதமர் மோடி நாற்காலி சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார் ஆகிய இரு கால்கள் முட்டுக்கொடுத்ததால் தான் தாங்கி நிற்கிறது. தமிழக முதல்வர் நாற்காலி விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் ஆகிய 4 செங்கல்களின் ஆதரவில் தான் நிற்கிறது. ஒரு செங்கல் உருகினாலும் ஆட்சி கவிழும்.

நீட் தேர்வுக்கு எதிராக வலுவான எதிர்ப்பையோ, கண்டனத்தையோ முதல்வர் இதுவரை தெரிவிக்கவில்லை. பாஜகவின் சர்க்கஸ் யானை போல தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுகிறார். 41 உயிர்கள் பலியாக காரணமான மதம்பிடித்த யானை போன்றது இந்த ஆட்சி.

முதலமைச்சர் விஜய்

பா.ஜ.க -வின் தமிழிசை சௌந்தரராஜன் கூட முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த இடஒதுக்கீட்டால் தான் மருத்துவரானார். நீட் தேர்வு இல்லாமல் மருத்துவர்களை உருவாக்கியது திராவிட ஆட்சி.

நீட் தேர்வினால் இதுவரை 30 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தேர்வு ரத்து செய்யப்பட்டதால் 2.5 லட்சம் மாணவர்களின் மனநிலை பிரசவத்தில் குழந்தையை இழந்த தாயின் வலியைப் போன்றது.

நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்பட்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவக் கல்லூரி சேர்க்கை நடத்தப்பட வேண்டும்" என தெரிவித்தார்.

“அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்த முதல்வர்” - பதவியேற்பு விழா எப்போது?

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முதல்வருடன் அமைச்சர்களாக பதவியேற்ற ஒன்பது பேருக்குமான துறைகள் ஒதிக்கீடும் அப்போத... மேலும் பார்க்க

'எங்களுக்காக கோர்ட்ல கேஸ் நடத்துனதே முதல்வர் விஜய்தான்!' - பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு மக்கள்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் குறித்து முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. முதல்வர் ஆவதற்கு முன்பு பிரசாரத்தின் போது தனது முதல் மக்கள் சந்திப்பை விஜய... மேலும் பார்க்க

"வென்டிலேட்டருடன் கூடிய ஐ.சி.யூ வார்டுகூட இல்லை என்பது வேதனை!" - ஸ்ரீரங்கம் த.வெ.க எம்.எல்.ஏ

தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும், தரம் உயர்த்துவது குறி... மேலும் பார்க்க

Pawan Kalyan: "விஜய்யுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்" - தொண்டர்களுக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்

தமிழ்நாட்டின் முதல்வராக, நடிகர் விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் அவரை ஆந்திர மாநிலத் துணை முதலமைச்சரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணுடன் ஒப்பிட்... மேலும் பார்க்க

காங்கிரஸ்: ``அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமா?" - `NO' சொல்லும் கார்த்தி சிதம்பரம்; காரணம் என்ன?

தவெக ஆட்சி அமைத்ததும், அ.தி.மு.க-வில் இப்போது நடந்துவரும் உட்கட்சிப் பூசலெல்லாம் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பான செய்தியாக வலம் வருகின்றன. இந்த நிலையில், தவெகவுக்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம்... மேலும் பார்க்க

கைநழுவிய மெகா திட்டம்: ``தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதி"- முதல்வர் விஜய்-யிடம் TRB ராஜா கோரிக்கை

இந்தியாவின் 5-ம் தலைமுறை அதிநவீன ஸ்டெல்த் போர் விமானத் திட்டமான 'AMCA' (Advanced Medium Combat Aircraft) விமான சோதனை மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை, ஆந்திர பிரதேச மாநிலத்திடம் தமிழ்நாடு இழந்துள்ளது பெர... மேலும் பார்க்க