``லஞ்சப் பணத்தை எலிகள் தின்றுவிட்டன?" - அதிகாரியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச...
பாமக: "உயிருக்கு ஆபத்து" - அன்புமணி மீது ராமதாஸ் உதவியாளர் மீண்டும் புகார்!
"பாமக தலைவர் அன்புமணி தரப்பினரால் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் உதவியாளர் சுவாமிநாதன் டிஜிபியிடம் மீண்டும் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக டிஜிபி அலுவலகத்தில் சுவாமிநாதன் அளித்துள்ள புகாரில், "பாமக தலைவர் அன்புமணி, அவரது மேலாளர் சசிகுமார் ஆகியோரால் என் மீது பொன்னேரி நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அன்புமணி, அவர் மனைவி சௌமியா, ராயபுரம் ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் பாலு, சேலம் கார்த்தி, வழக்கறிஞர் வினோபாவா, அன்புமணி மேலாளர் சசிகுமார் ஆகியோரால் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இருமுறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சசிகுமார் தொடர்ந்த வழக்கில் வருகின்ற 27 ஆம் தேதி கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜராக செல்லும்போது எனக்கும் என் குடும்பத்தினருக்கும் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் பாமக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

















