செய்திகள் :

பாமக: 'மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க முடியாது'- ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

post image

பா.ம.க கட்சி ராமதாஸ் - அன்புமணி என இருவருக்கும் இடையிலான மோதலால் இரண்டாக பிளவுண்டது. அதைத் தொடர்ந்து பா.ம.க தலைவர் `நான்தான்' என இருவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதற்கிடையில், அன்புமணி தரப்பு பா.ம.க அணி எ.டி.ஏ கூட்டணியில் இணைந்து, 18 தொகுதிகளையும் பிரித்து வாங்கிக்கொண்டார். அதைத் தொடர்ந்து தேர்தலுக்கான வேலைகளில் தீவிரமாகியிருக்கிறார். அதே போல, ராமதாஸ் தரப்பு பா.ம.க அணி சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அறிவித்து தேர்தலை எதிர்கொள்கிறார். இதற்கிடையில், பா.ம.க கட்சியின் மாம்பழச் சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.

ராமதாஸ், சசிகலா

இதற்கு முன்னரே ராமதாஸ் தரப்பு, ``கட்சியின் நிறுவனர் நான் என்ற ரீதியில் பா.ம.க-வின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை அன்புமணி பயன்படுத்தக் கூடாது" எனக் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதையும் மீறி அன்புமணி தரப்பு கட்சியின் அடையாளங்களைப் பயன்படுத்தி வருகிறது. இதை எதிர்த்து, ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், ``பாமக பெயா், சின்னம், கட்சிக் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். கட்சியின் தலைவராக என்னை அறிவிக்க வேண்டும்" என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிா்த்து ராமதாஸ் தொடா்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி ராமதாஸ் மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் மூன்று நாள்களுக்குள் விசாரித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. அதன்படி உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ்

இந்த வழக்கு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்மபிரபு முன் (நேற்று) புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு அன்புமணி தரப்பில் வியாழக்கிழமை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதைத் தொடா்ந்து இருதரப்பும் வாதங்களை முன்வைக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். இந்த வழக்கு இன்று உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது. மேலும் பாமகவின் தலைவராக ராமதாஸை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்திருக்கிறது. சின்னம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு ராமதாஸ் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

திடீரென டிஜிபி அலுவலகத்தில் விஜய்; யார் மீது புகார் கொடுத்தார்? - விவரம் என்ன?

தவெக தலைவர் விஜய் திடீரென சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று ஒரு புகாரை கொடுத்திருக்கிறார். விஜய் டிஜிபி அலுவலகம் சென்ற பின்னணி என்ன? யார் மீது புகார் கொடுத்தார்?TVK VIJAYஅப்துல் கலாமின் உதவிய... மேலும் பார்க்க

"எங்களது முடிவு பல பேரின் தூக்கத்தை கெடுக்கும்; விஜய்யுடன் கூட்டணியா.!"- வேல்முருகன் பேச்சு

திமுக கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வே... மேலும் பார்க்க

`கரையேறும் அதிமுக மா.செ-க்கள்; அடிசறுக்குகிறதா திமுக தொகுதிகள்?' - ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட களம்!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், அமைப்புரீதியாக ஐந்து மாவட்டக் கழகங்களாக அ.தி.மு.க-வின் கட்டமைப்பு இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி உட்... மேலும் பார்க்க

ஹார்முஸ் டோல்கேட்: அமெரிக்காவின் ஆயுதத்தைக் கையில் எடுக்கும் ஈரான்? - உலகப் பொருளாதாரம் என்ன ஆகும்?

ஹார்முஸ்பழங்காலம் முதலே பட்டு, முத்து மற்றும் வாசனை திரவியங்களின் வர்த்தக மையமாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை, இன்று உலகப் பொருளாதாரத்தின் 'கழுத்துப்பகுதி' என அழைக்கப்படுகிறது. ஈரானுக்கும் ஓமனுக்கும் இடை... மேலும் பார்க்க

மல்லுக்கட்டும் திராவிட கட்சிகள்; இளம் வாக்குகளை கவரும் TVK, NTK! - பெரம்பலூரில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'இன்று நாம் பார்க்கப்போவது பெரம்பலூர் மாவ... மேலும் பார்க்க

தஞ்சாவூர் தொகுதி பாஜக-வுக்கு.! `5 வருட நம்பிக்கைக்கு கிடைத்த ஏமாற்றம்' - அதிமுகவினர் ஆதங்கம்!

அதிமுக-வில் தஞ்சாவூர் மாநகரச் செயலாளராக இருப்பவர் என்.எஸ்.சரவணன். தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராக சரவணன் உறுதி செய்யப்பட்டு விட்டதாக சில மாதங்களுக்கு முன்பே பரவலாக பேசப்பட்டது. எடப்பாடி பழனிசாமி பச்சை கொட... மேலும் பார்க்க