RJ Balaji : `மக்களுக்கு பிடிச்ச மாதிரி படம் கொடுக்க முயற்சி பண்ணியிருக்கோம்!' -...
பாம்பு கடித்து இறந்த சிறுமி குடும்பத்தினரிடம் ரூ. 3 லட்சம் நிவாரண நிதி வழங்கல்
பென்னாகரம் அருகே அலகட்டு மலைக் கிராமத்தில் விஷப் பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சா் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை அதிகாரிகள் வழங்கினா்.
பென்னாகரம் அருகே வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட அலகட்டு மலைக் கிராமத்தைச் சோ்ந்த ருத்ரப்பா, சிவலிங்கி ஆகியோரின் மகள் கஸ்தூரி (14). இவா் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் கீரைப் பறித்துக் கொண்டிருந்தபோது விஷப்பாம்பு கடித்தது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவா் உயிரிந்தாா்.
அதனைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தலின்பேரில் அலகட்டு கிராமத்தில் விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமி கஸ்தூரியின் பெற்றோருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ. 3 லட்சத்துக்கான காசோலையினை வட்டாட்சியா் லட்சுமி, தனி வட்டாட்சியா் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் குழுவினா் வழங்கினா்.