செய்திகள் :

பாயசத்தில் விஷம்; கணவனைக் கொன்று குளியலறையில் புதைத்து நாடகமாடிய மனைவி; சிக்கியது எப்படி?

post image

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சிகந்தரா என்ற இடத்தில் வசித்து வந்தவர் சுரேந்திரா. இவரது மனைவி ரூபி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன.

சுரேந்திரா கடந்த மே மாதம் திடீரென காணாமல் போய்விட்டார். இது குறித்து ரூபி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் 40 நாட்களுக்கும் மேலாக விசாரணை நடத்தி வந்தனர்

இது போன்ற வழக்குகளில் மொபைல் போன் அழைப்புகள் மற்றும் நடமாட்டங்களை வைத்துப் போலீஸார் விசாரிப்பார்கள். போலீஸார் ரூபின் வீட்டிற்குச் சென்று விசாரித்தப்போது ரூபி மிகவும் பதட்டமாக இருந்தார். அதோடு தனது கணவரின் சகோதரரையும் உடனே வரவழைத்தார்.

ரூபியின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் அவர் மீது சந்தேகம் வலுவடைந்தது.

மனைவியிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீஸார் சில தொழிலாளர்களுடன் அந்த வீட்டின் குளியலறையின் தரையில் புதிதாகப் பூசப்பட்டிருந்த சிமெண்ட் காரை மற்றும் பிளாஸ்டர் உடைத்து, அதற்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த கணவனின் உடலை மீட்டனர்.

உடலின் அழுகிய வாசனை வெளியில் வராமல் இருக்கவும், அக்கம் பக்கத்தினருக்குத் தெரியாமல் மறைக்கவும் கணவனைக் கொலை செய்த பிறகு குளியலறையில் புதைத்துள்ளார்.

இந்தக் கொலையில் மனைவியே முதன்மைக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், உடலைப் புதைப்பதற்கான ஆழமான குழியைத் தோண்டுவது, மண்ணை அகற்றுவது, சிமெண்ட் பூசுவது போன்ற வேலைகளை ஒருவரே தனியாகச் செய்வது கடினம் என்பதால், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்று ஆக்ரா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

குற்றத்திற்கு உதவிய கூட்டாளிகளைக் கண்டறிய அந்தப் பகுதியின் சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

தன் கணவர் காணாமல் போனதில் இருந்து தான் மிகவும் மனமுடைந்து சோகமாக இருப்பதாக அக்கம் பக்கத்தினரிடம் காட்ட அந்தப் பெண் அவர்கள் முன்னிலையில் அழுது நாடகமாடி வந்தார். இருப்பினும், கணவர் சுரேந்திரா காணாமல் போன சூழ்நிலை குறித்து அவர் கூறிய விளக்கங்களில் பல முன்னுக்குப் பின் முரணான விஷயங்கள் இருப்பதை சுரேந்திராவின் குடும்பத்தினர் கண்டுபிடித்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ''ரூபி சம்பவத்தன்று தனது இரண்டு மகள்களையும் தனது மைத்துனர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பின்னர் கணவருக்கு தூக்க மாத்திரை கலந்த பாயசத்தைக் குடிக்க கொடுத்தார். அவர் உறங்கிய பிறகு கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை குளியல் அறையில் புதைத்தார்'' என்று தெரிவித்தனர்.

ஆக்ராவில் நடந்த இந்தச் சம்பவம், பிப்ரவரி 2025-ல் நடந்த 'ப்ளூ டிரம்' (Blue Drum) கொலை வழக்கின் அதிர்ச்சியூட்டும் பின்னணியோடு பல ஒத்த தன்மைகளைக் கொண்டுள்ளது. அந்த வழக்கில், சௌரப் ராஜத்தை அவரது மனைவி முஸ்கான் ராஜ்புத்தும், அவளது காதலன் சாஹிலும் சேர்ந்து கொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி, ஒரு நீல நிற பிளாஸ்டிக் டிரம்முக்குள் வைத்து சிமெண்ட்டால் மூடி சீல் வைத்தனர்.

போலீஸார் கூற்றுப்படி, சுரேந்திரா வேலையில்லாமல் இருந்ததோடு, மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகியிருந்தார். அவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி ரூபியைத் தாக்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.

கொலை
கொலை

சுரேந்திராவுக்கு வேலை இல்லாததால், அந்தக் குடும்பத்தின் வீட்டுச் செலவுகளுக்கு சுரேந்திராவின் தாயார் பெற்று வந்த ஓய்வூதியத்தைத்தான் அவர்கள் முழுமையாக நம்பியிருந்ததனர்.

ரூபியிடம் போலீஸ் விசாரித்த போது, தான் நீண்ட காலமாகத் தனது கணவனால் தொடர்ச்சியான குடும்ப வன்முறைகளை அனுபவித்து வந்ததாக ரூபி தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம் போலத் தனது கணவர் தன்னை மிகக் கொடூரமாகத் தாக்கியதாகவும், அந்தத் தாக்குதலுக்குப் பிறகே அவரைக் கொலை செய்ய தான் முடிவெடுத்ததாகவும் ரூபி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பட்டுக்கோட்டை: மனைவி, 2 மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன் - பணம் தராததால் வெறிச்செயல்!

பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(65) கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி(60) இவர்களுக்கு மேனகா(38), மௌனிகா(25) என இரண்டு மகள்கள். மேனகா திருமணமானவர். கருத்துவேறுபாட்டால் ... மேலும் பார்க்க

குடும்ப சண்டை; மொபைல் போன் கொண்டு தாக்கிய மனைவி - காயமடைந்த கணவர் உயிரிழந்த சோகம்

அன்றாட வாழ்க்கையில் மொபைல் போனின் பயன்பாடு மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வீட்டில் நடக்கும் பெரும்பாலான சண்டைகள் மொபைல் போன் தொடர்பானதாக இருக்கிறது. இந்த மொபைல் போனால் கணவன் மனைவி இடையேயும் ... மேலும் பார்க்க

சக பெண் ஊழியரை குத்திக் கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - குருகிராம் அதிர்ச்சி

ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்களாக 25 வயதான ஸ்ரேஷ்ட் மாலிக் மற்றும் இஷாரா அயூபி (இஷிகா என்றும் அழைக்கப்படுபவர்) ஆகியோர் பணியா... மேலும் பார்க்க

`நாலாவது குழந்தைய எப்படி வளர்க்க போறீங்க? பேசாம வித்துடலாம்' - காரைக்குடியை உலுக்கிய குழந்தை விற்பனை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மெமெ வீதியைச் சேர்ந்தவர் பழனிகுமார், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மே 21-ம் தேதி காரைக்... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்றபோது வாக்குவாதம்; நடுரோட்டில் மனைவியை சுட்டுத் தள்ளிவிட்டு சென்ற டெல்லி போலீஸ்காரர்

டெல்லி போலீஸின் வாகன திருட்டு தடுப்பு படையில் பணியாற்றி வருபவர் மனீஷ்பதி. இவரது மனைவி பிரியங்கா. அவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இன்று கணவன் மனைவி இருவரும் ஸ்கூட்டர் ஒன்றில் சென்று கொ... மேலும் பார்க்க

சேலம்: மூடியிருந்த அம்பேத்கர் சிலையைத் திறந்த நபர்கள்; கல்வீச்சு, தடியடி என விடியவிடிய வன்முறை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம், ஒதியத்தூர் ஊராட்சி பேருந்து நிலையம் பகுதியில் காமராஜர், ராஜீவ் காந்தி ஆகியோரின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அம்பேத்கர் சிலை... மேலும் பார்க்க