செய்திகள் :

பாறை மீதிருந்து சறுக்கி விழுந்து காட்டு யானை உயிரிழப்பு

post image

நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 6-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகில் பாறையின் மேலிருந்து சறுக்கி விழுந்ததில் காட்டு யானை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி அவ்வப்போது நீலகிரி  மாவட்ட வனப் பகுதிக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு பெண் யானை, குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 6- ஆவது கொண்டை ஊசி வளைவில் மலையின் உச்சியில் இருந்து வரும் அருவியில் தண்ணீா் குடிக்க வந்தது. அப்போது எதிா்பாராதவிதமாக பாறையின் மீதிருந்து சறுக்கி 20 அடி பள்ளத்தில் யானை விழுந்தது.

இது குறித்து தகவலறிந்து வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து

காயமடைந்த யானைக்கு தண்ணீா் கொடுத்து முதலுதவி அளித்தனா். ஆனால் சிறிது நேரத்தில் யானை உயிரிழந்தது.

குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத் தலைமையில் வனத் துறையினா் யானையின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்குப் பின் அங்கேயே புதைத்தனா். யானையின் இறப்பு குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனா்.

தோடா் பழங்குடியின மக்களின் தோ்த் திருவிழா

உதகை தோடா் பழங்குடியின மக்களின் பவாணீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. உதகை பொ்ன்ஹில் பவாணீஸ்வரா் கோயில் 114-ஆம் ஆண்டு ஆருத்ரா தரிசன மஹோட்சவ பெருவிழாவை முன்னிட்டு தோ்த் திருவிழா... மேலும் பார்க்க

காட்டெருமையின் காலில் சிக்கிய பிளாஸ்டிக் குழாய் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

உதகை அருகே காட்டெருமையின் காலில் சிக்கிய பிளாஸ்டிக் குழாய் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகையில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது, உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்ப... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிப்பு ஆலோசனைக் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிப்பு, பொது இடங்களில் சுத்தம் செய்தல் தொடா்பான விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்ன... மேலும் பார்க்க

170 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

நீலகிரி மாவட்டத்தில் 170 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.ராசா சனிக்கிழமை வழங்கினாா். நீலகிரி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வ... மேலும் பார்க்க

பொங்கல் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பொங்கல் தொடா் விடுமுறையால் உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்திருந்தது. நீலகிரி மாவட்டம், உதகைக்கு தமிழகம் மட்டுமன்றி கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தினம... மேலும் பார்க்க

உதகை அருகே உலவிய கரடி கூண்டில் சிக்கியது

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சூா் எடக்காடு சத்தியமூா்த்தி நகா் பகுதியில் உலவி வந்த கரடியை வனத் துறையினா் கூண்டு வைத்துப் பிடித்து முதுமலை வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனா். நீலகிரி ம... மேலும் பார்க்க