செய்திகள் :

பாலியல் குற்றச்சாட்டு: கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

post image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் நிர்வாகியாக இருந்தவர் மதூர் சத்யா. சமூக வலைதளங்கள், ஊடக விவாதங்களில் தன்னுடைய அரசியல் கருத்துகளுக்காக பிரபலமடைந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்புகளான ஏ.ஐ.ஒய்.எஃப், ஐ.எஸ்.சி.யு.எஃப் ஆகியவற்றில் தீவிரமாக இயங்கி வந்தார். இந்த நிலையில், மதூர் சத்யா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் இ-மெயில் மூலம் தங்கள் புகார்களை கட்சி நிர்வாகிகளுக்கு அனுப்பினர். அந்தப் புகார்களை விசாரித்த கட்சி நிர்வாகிகள், அவரை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்தனர்.

மதூர் சத்யா
மதூர் சத்யா

அத்துடன் பதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக காவல்துறை சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க கோரி புகார் கடிதத்தையும் அளித்து இருந்தனர்.  இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மதூர் சத்யா பெங்களூருவில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை மாலை பெங்களூருவில் சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட அவர், விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்படுவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை: `தனிமையில் சந்திக்கலாம் வா' - தனியார் ஊழியரிடம் பெண் குரலில் பேசி வழிப்பறி செய்த டிரைவர்கள்

சென்னை, அயப்பாக்கத்தில் வசித்து வருபவர் லோகநாதன் (23). இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 16.03.2026-ம் தேதி இரவு செல்போன் செயலி மூலம் பெண் ஒருவர் அறிமுகமாகியிருக்கிற... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: செயின் பறிப்பு டு மூதாட்டி வன்கொடுமை - கைதானவரின் அதிர்ச்சி பின்னணி

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி லிங்கம்மாள். இவர்களுக்கு தர்ம முனீஸ்வரன், ஈஸ்வரன், அழகு முனீஸ்வரன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இதில், தர்ம முனீஸ்வரன், பள்ளிப்படி... மேலும் பார்க்க

"உன் கணவர் இறந்துவிடுவார்" - போதைப்பொருள் கொடுத்து பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடர்

நாசிக்கில் ஜோதிடராக இருப்பவர் அசோக் கராட். தன்னை கேப்டன் என்று அழைத்துக்கொண்ட அசோக் கராட், தான் கப்பலில் வேலை செய்து ஓய்வு பெற்ற அதிகாரி என்று அனைவரிடமும் அறிமுகப்படுத்திக்கொண்டார். இவர் தன்னிடம் வரும... மேலும் பார்க்க

திருட்டு பைக்; கைகொடுத்த தரவுகள்.. மாணவி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி?- எஸ்.பி விளக்கம்!

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 5 பேரின் டி.என்.ஏ மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில், ஒருவரின் டி.எ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: சதைத் துணுக்கு, டி.என்.ஏ ரிப்போர்ட்- மாணவி கொலை வழக்கில் சி.சி.டி.வி-யால் சிக்கிய நபர்

தூத்துக்குடி பள்ளி மாணவி மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில், 9 நாள்களுக்குப் பிறகு டி.என்.ஏ பரிசோதனை முடிவின் அடிப்படையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவரைக் கைதுசெய்து, விசாரணை நடத்தி வருகின்... மேலும் பார்க்க

`போலீஸ் துணையுடன் தற்கொலைக்கு.!' - வீட்டுக்குள் இருந்தே செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பிரமுகர்

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் கேபிள் செந்தில் என்கிற செந்தில்குமார். இவர் அதிமுக-வில் தஞ்சாவூர் மத்திய மாவட்ட அம்மா பேரவை மாவட்டத் தலைவராக இருக்கிறார். தஞ்சாவூர், பால்பண்ணை ரஹ்மான் நகரைச் சேர்ந்தவர் ஷேக் சிர... மேலும் பார்க்க