செய்திகள் :

பாலியல் குற்றாவாளிக்கு 17-வது முறை பரோல்: ‘சட்டம் அனைவருக்கும் சமம்’ என்பது வெறும் வார்த்தை தானா?

post image

பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், தற்போது 17-வது முறையாக பரோல் மூலம் சிறையில் இருந்து வெளிவந்திருக்கிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு அவரது பெண் சீடர்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்த வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் குர்மீத் ராம் ரஹீம் சிங் சிறையில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. மேலும் அடிக்கடி பரோல்களும் வழங்கப்படுகிறது.

குர்மீத் ராம் ரஹீம்
குர்மீத் ராம் ரஹீம்

இந்நிலையில் மீண்டும் 17-வது முறையாக சிறையில் இருந்து அவர் 21 நாட்கள் பரோலில் வெளிவந்திருக்கிறார்.

2020 ஆம் ஆண்டிலிருந்து இவர் அடிக்கடி பரோல் பெற்று சிறையிலிருந்து வெளியே வருவது தொடர்ந்து சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி, சிறைச்சாலையைத் தனது ஓய்வு விடுதியைப் போலப் பயன்படுத்துவது 'சட்டம் அனைவருக்கும் சமம்' என்ற ஜனநாயகத்தின் அடிப்படைத் தூணை அசைத்துப் பார்க்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட போது, தங்களுக்கு நீதி கிடைத்துவிட்டது என்ற நம்பிக்கையும் பாதுகாப்பும் பிறந்திருக்கும்.

ஆனால், அதே குற்றவாளி அடிக்கடி அர்த்தமற்ற பரோலில் வந்து தன் இஷ்டபடி வாழ்வது, பாதுக்கப்பட்ட அந்தப் பெண்களின் மனதில் மீண்டும் எந்தளவிற்கு அச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

குர்மீத் ராம் ரஹீம் சிங்
குர்மீத் ராம் ரஹீம் சிங்

குர்மீத் ராம் ரஹீம் கொடுக்கப்படும் பரோல் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை போன்ற கொடூரக் குற்றங்களைச் செய்தவர்களும் கூடத் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்திச் சிறை விதிகளின் துளைகள் வழியே தப்பித்துவிடலாம் என்ற ஆபத்தான முன்னுதாரணத்தை இது சமூகத்தில் உருவாக்குகிறது.

சாதாரண வழக்கில் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு எளிதில் கிடைக்காத பரோல் சலுகை, ஒரு சக்திவாய்ந்த ஆன்மிகவாதிக்கும், அரசியல் பலம் கொண்ட நபருக்கும் தாராளமாக வழங்கப்படுகிறது. அதிகார பலமும் அரசியல் ஆதரவும் இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா?

சிறைச்சாலை என்பது குற்றவாளிகளைச் சீர்திருத்தவும், அவர்கள் செய்த கொடூரமான குற்றத்திற்குரிய தண்டனையை அனுபவிக்கவும் உருவாக்கப்பட்ட இடம். மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை பிறர், அந்த குற்றத்தை செய்ய தயங்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

ஆனால், தண்டனைக் காலத்திலேயே ஒரு குற்றவாளிக்கு இப்படித் தொடர் பரோல் வழங்கப்பட்டால், நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பிற்கும், சட்டத்தின் கடுமையான விதிகளுக்கும் என்ன மதிப்பு இருக்கிறது?

பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதையும் அச்சத்திலும் வேதனையிலும் கழிக்கும் போது, குற்றவாளிக்கு மட்டும் சுதந்திரமான வாழ்க்கையை அனுமதிப்பது கேலி கூத்தாக இருக்கிறது.

சட்டம்
சட்டம்

அரசியல் ஆதாயங்களுக்காகச் சட்டத்தின் துளைகளைப் பயன்படுத்தி வழங்கப்படும் இதுபோன்ற பரோல்கள் உடனடியாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

இல்லையெனில் சட்டத்தின் மீது மக்களுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கையும் முற்றிலுமாக சிதைந்துவிடும்.!

இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் வினீத் மினோச்சா (63). தொழிலதிபரான இவரின் மருமகள் பெயர், ஷாலு. சம்பவத்தன்று வினீத் அவரது வீட்டில் 26 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பா... மேலும் பார்க்க

நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!

நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.வீட்டுக்குள... மேலும் பார்க்க

`Will Kill Sugar Daddy Soon' - மனைவியைக் கொன்று தலையை ஃபிரிட்ஜில் வைத்த இளைஞர் `பகீர்' தகவல்!

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வி... மேலும் பார்க்க

குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேடும் கடலூர் போலீஸ்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது.... மேலும் பார்க்க

வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் - அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்

மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்... மேலும் பார்க்க