டயாலிசிஸ் சேவைகளை தனியாா் பங்களிப்புடன் மேம்படுத்த நிபுணா் குழு ஆலோசனை
பிக் பாஸ் 8: இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே ஒரு கோடு போடப்பட்டு, வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு, ஆண்கள், பெண்கள் இடையே போட்டி நிலவி வந்தது.
ஆனால் சென்ற வாரம்முதல் கோடு எடுக்கப்பட்டு, அவரவர் தங்களது தனிநபர் விளையாட்டை ஆடி வருகின்றனர். வைல்டு கார்டு போட்டியாளர்கள் ஆட்டத்தை மாற்றி உள்ளதால், நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்கிறது.
இதையும் படிக்க: ஒருநாள் முன்பாக வெளியாகும் புஷ்பா - 2!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 8 வாரங்களை கடந்துள்ள நிலையில், மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் இந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளர் நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமார் வெளியேற்றப்பட்டதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
நடிகர் சிவக்குமார் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் உள்ளனர்.
கடந்த வாரங்களில் தயாரிப்பாளர் ரவீந்திரன், அர்ணவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி சுரேஷ், ரியா ஆகியோர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.