செய்திகள் :

பிப். 24 முதல் உலக நாடுகளுக்கு புது வரி அமல்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ட்ரம்பின் புது ரூட்!

post image

'அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்போ, தீர்ப்பில்லையோ... வரி ரத்தோ, வரி ரத்து இல்லையோ... நான் வரி போட்டே தீருவேன்' என்றுதான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருக்கிறார்‌ போலும்.

கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20), 'அதிபர் அதிகாரத்தை மீறி சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)-ன் கீழ், உலக நாடுகளின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது' என்று ட்ரம்பிற்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது அமெரிக்க உச்ச நீதிமன்றம்.

இதனால், கடந்த ஆகஸ்ட் மாதம், IEEPA-ன் கீழ், உலக நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவித்த வரிகள் ரத்து செய்யப்படுகின்றன.

ட்ரம்ப் - பரஸ்பர வரி
ட்ரம்ப் - பரஸ்பர வரி

ஆனால், எப்படியாவது வரி போட்டே ஆக வேண்டும் என்று ட்ரம்ப் உறுதியாகி இருக்கிறார்.

இதற்காக, தற்போது புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளார் ட்ரம்ப்.

அமெரிக்க சாசனத்தின் படி, வரிச் சட்டம் 1974-ன் கீழ் பிரிவு 122 தான் அது.

வர்த்தக பற்றாக்குறை எழும்போது, இந்தச் சட்டத்தின் கீழ், 15 சதவிகிதம் வரை வரி விதிக்க முடியும்.

தீர்ப்பு வந்த அன்று, வெள்ளிக்கிழமை இந்தச் சட்டத்தின் கீழ், உலக நாடுகளின் மீது 10 சதவிகித வரியை விதித்திருந்தார்‌‌ ட்ரம்ப்.

நேற்று, அதை 15 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறார்.

இந்த வரி விதிப்பு வரும் 24-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மேலே சொன்ன சட்டத்தின் கீழ், 150 நாள்கள் மட்டுமே வரி விதிக்க முடியும்.

அதற்குள் ட்ரம்ப் அரசாங்கம் வலுவாகவும், சட்டத்திற்கு உட்பட்டும் வரி விதிப்பைக் கொண்டு வரும்.

அது எப்படி இருக்கப் போகிறதோ?

மதுரை: `நாம தான் ஜெயிக்கிறோம், எப்பவுமே நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்'- மு.க.ஸ்டாலின் பேச்சு

fமதுரை உத்தங்குடியில் தென் மண்டல வாக்குச்சாவடி பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி, டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ள... மேலும் பார்க்க

'எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் எடப்பாடியை பார்த்து அழுதிருப்பார்' - உதயநிதி

திமுக மேற்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் நடைபெற்றது. இதில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், "இன்றைக்கு மேற்கு மண்டலத்துக்குட்பட்ட, 39 தொ... மேலும் பார்க்க

வேலூர்: விஜய்க்காகத் தயாரான பிரமாண்ட பந்தல்; 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி - பரபரக்கும் ஏற்பாடுகள்!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அடுத்துள்ள அகரம்சேரியில் நாளை நடைபெறும் த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். இதற்காக 4,900 பேர் அமரும் வகையில் ... மேலும் பார்க்க

"குருவாயூரப்பனை சேவித்துக்கொண்டே நான் இறக்க வேண்டும்" - சுரேஷ் கோபி

கேரள மாநிலம் கொச்சியில் ஓர் ஆங்கில பத்திரிகையின் (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்) விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி பேசுகையில், "குருவாயூர் தேவசம்... மேலும் பார்க்க

"நாங்கள் திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டோம், ஆனால் எங்களுக்கு"- முஸ்லீம் லீக் காதர் மொகிதீன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "திமுக கூட்டணியை மேலும் வலுப்ப... மேலும் பார்க்க

தள்ளிப்போகும் பேச்சுவார்த்தை; இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்தில் சுணக்கம்?

கடந்த 2-ம் தேதி, இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் அறிவிப்பை வெளியிட்டார்கள் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப்.இந்த ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்டு, வரும் ஏப்ரல்‌ மாதம் முதல் அமலுக்க... மேலும் பார்க்க