செய்திகள் :

'பிரதமராகும் தகுதி ராகுல் காந்திக்கு மட்டுமே உண்டு' - தவெக-க்கு காங்கிரஸ் மீண்டும் பதிலடி

post image

அடுத்த நாடாளுமன்ற தேர்தல் பிரதம வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் த.வெ.க இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைவர் ராகுல் காந்தியை 2029 இல் பிரதமராக ஏற்காவிட்டால் தமிழகத்தில் த.வெ.க அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜேஷ் குமார் கருத்தினை வரவேற்கிறேன்.

கடந்த 30 ஆண்டுகளாக பாஜக அரசை எதிர்த்து மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பவர் ராகுல் காந்தி அவர்கள் மட்டுமே.

கணபதி சிவக்குமார்
கணபதி சிவக்குமார்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலையையும் முடிவுகளையும் வைத்துக்கொண்டு வலுவாக வேர்விட்ட அரசியல் கட்சியாக த.வெ.க உருவாகி விட்டதாக போலியாக நினைத்து தமிழக அமைச்சர்கள் பொதுவெளியில் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். வேர் கொண்ட மரங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் துளிர்க்கலாம். பூக்கலாம். எந்த இயற்கை சீற்றத்தையும் தாங்கும் சக்தியும் வேர்கொண்ட மரங்களுக்கு உண்டு .

ஆனால் த.வெ.க இப்பொழுது தான் முளைக்கத் தொடங்கியுள்ள செடி. வேர் விட்டு வளரும் வரை பொறுமை காக்க வேண்டும். தமிழக கள அரசியலை புரிந்து கொண்டு மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து இயக்கம் வளர்வதில் கவனம் செலுத்த வேண்டும். அதை விடுத்து இன்னமும் பூரண மெஜாரிட்டி இல்லாத சூழலில் இல்லாத ஊருக்கு வழி தேடுவது த.வெ.க-வின் எதிர்கால அரசியலுக்கு நல்லதல்ல" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க