செய்திகள் :

பிரதமரின் தமிழ்நாடு வருகை; ரூ.5,650 மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் மோடி!

post image

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை (மார்ச் 11, 2026) தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின் போது, இரு மாநிலங்களிலும் மொத்தம் ரூ.16,450 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக வெளியாகியிருக்கும் தகவலில், ``நாளை மதியம் 1:30 மணியளவில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடைபெறும் விழாவில் ரூ.10,800 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

 பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கொச்சி பிபிசிஎல் (BPCL) சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.5,500 கோடி மதிப்பிலான 'பாலிப்ரோப்பிலீன்' (Polypropylene) உற்பத்தி பிரிவிற்கு அடிக்கல். ரூ.2,650 கோடி மதிப்பிலான என்.ஹெச்-66 சாலைத் திட்டம் மற்றும் கோழிக்கோடு புறவழிச்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். மேலும், ஷோரனூர் - நிலம்பூர் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையையும் தொடங்கி வைத்து, பாலக்காடு - பொள்ளாச்சி இடையே புதிய ரயில் சேவையைக் கொடியசைத்துத் துவக்கி வைக்கிறார். கேரளப் பயணத்தை முடித்துக்கொண்டு மாலை 5:45 மணியளவில் திருச்சி வரும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் விழாவில் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ரூ.3,680 கோடி முதலீட்டில் 'சிட்டி கேஸ்' (City Gas) விநியோகக் கட்டமைப்புத் திட்டத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் சுமார் 8.8 லட்சம் வீடுகளுக்குக் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கப்பட உள்ளது. சென்னை மணலியில் ரூ.1,490 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (IOCL) லூப் கலவை ஆலையை (Lube Blending Plant) அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மோடி
மோடி

தமிழகத்திலிருந்து தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் கிழக்கு இந்தியாவுக்குச் செல்லும் வகையில் 2 அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 3 புதிய ரயில் சேவைகளைப் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டத்தின் கீழ் (PMGSY) தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 370 கி.மீ நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை அவர் திறந்து வைக்கிறார். மேலும், கங்கை கொண்ட சோழபுரம் அருகே அமையும் புதிய புறவழிச்சாலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார்." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

"போர் தொடர்ந்தால் உலகளாவிய எண்ணெய் சந்தைக்கு பேரழிவு ஏற்படும்" - எச்சரிக்கும் சவுதி அராம்கோ CEO

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலக அரங்கில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் மேற்காசியாவில் ... மேலும் பார்க்க

திமுக-வின் `தொகுதி குறைப்பு நடவடிக்கை' - அப்செட்டில் கூட்டணி கட்சிகள்; புதிய யுக்தியுடன் அறிவாலயம்!

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்யாமல் இருப்பதால், அதை இறுதி செய்யும் வேலையை தி.மு.க தலைமை கையில் எடுத்துள்ளது.ஆனால், தாங்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கை... மேலும் பார்க்க

"தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரபலமாவதால் திமுக அதிர்ச்சி அடைந்து வருகிறது"- பிரதமர் மோடி

"தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரபலமாவதால் திமுக அதிர்ச்சி அடைந்து வருகிறது" என்று மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். பிரதமர் மோடி 2026 தேர்தலை முன்னிட்டு மூன்றாவது முறையாக தமிழகம் வர இருக்... மேலும் பார்க்க

ஆளுநர் மாற்றம்... குடியரசுத் தலைவர் அதிருப்தி - மேற்கு வங்கத்தில் சுழன்றடிக்கும் `அரசியல் புயல்!'

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வ தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும் மேற்குறிப்ப... மேலும் பார்க்க

'உங்க எல்லாரையும் எம்.எல்.ஏ-வா பார்க்கணும்!' - விஜய் `அறிவித்த' 60 வேட்பாளர்கள்?! - முழு விவரம்!

விஜய்யிடம் பாஜக கூட்டணிக்காக பேசிக்கொண்டிருக்கிறது என்கிற தகவல் அரசியல் புயலை கிளப்பியிருக்கும் சூழலில், தவெக சார்பில் முதற்கட்டமாக 60 வேட்பாளர்களை நேரில் அழைத்து, 'நீங்கள்தான் கேண்டிடேட். தொகுதியில் ... மேலும் பார்க்க

`தவெக-வுடன் கூட்டணியா? டீயும் காபியும் எப்போதும் ஒன்று சேராது..!' - அண்ணாமலை பதில்

அதிமுக- பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம், இத... மேலும் பார்க்க