செய்திகள் :

பீகார்: திடீரென விவசாயியின் வங்கிக் கணக்கிற்கு வந்த ரூ.10 கோடி; என்ன நடந்தது?

post image

பீகாரில் மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள தேவ்கஞ்ச் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரிதா. விவசாயி மனைவியான ரிதா எப்போதாவதுதான் வங்கி பக்கமே செல்வார். சமீபத்தில் தனது வங்கிக் கணக்கில் பணம் எடுக்க உள்ளூர் வங்கிக்குச் சென்றார். ஆனால் அங்கு வங்கி மூடப்பட்டு இருந்தது. இதனால் வங்கிக்கு வெளியில் இருந்த ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்கலாம் என்று சென்றார்.

அவர் தனது வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்தபோது அதிர்ச்சியாகிவிட்டார். வங்கிக்கணக்கில் ரூ.9,99,49,588 இருப்பதாகக் காட்டியது.

ATM
ATM

அதனை நம்ப முடியாமல் வேறு ஒரு ஏ.டி.எம்மிற்குச் சென்று மீண்டும் ஒரு முறை எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்தார். அப்போதும் அதே தொகையைத்தான் காட்டியது. இதையடுத்து இது குறித்து தனது குடும்பத்தில் உள்ளவர்களிடம் ரிதா தெரிவித்தார். குடும்பத்தில் சிலர் பணத்தை எடுத்துவிடலாம் என்று ஆலோசனை வழங்கினர்.

ஆனால் பணம் எப்படி தனது வங்கிக் கணக்கிற்கு வந்தது என்று தெரியாமல் அந்தப் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட எடுத்து செலவு செய்ய மாட்டேன் என்று ரிதா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். அதோடு ரிதாவும், அவரது குடும்பத்தினரும் இது குறித்து வங்கியில் தெரிவிக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் வங்கி விடுமுறையால் மூடப்பட்டு இருந்தது.

இதையடுத்து வங்கி திறக்கப்பட்டபோது வங்கிக் கணக்கில் பணம் வந்திருப்பது குறித்து ரிதா தெரிவித்தார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தத் தவறு நடந்திருக்கலாம் என்று வங்கி மேலாளர் ரிஷ்காந்த் தெரிவித்தார்.

அதோடு அவரது வங்கிக்கணக்கில் இருந்த பணம் திரும்ப எடுக்கப்பட்டது. தனக்கு வந்த பணத்தைச் செலவு செய்யாத ரிதாவின் செயலை வெகுவாகப் பாராட்டினர்.

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாகப் பேரணி; பாஜக அமைச்சரை நடுரோட்டில் வறுத்தெடுத்த இளம் பெண்

சமீபத்தில் மக்களவையில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது. இதையடுத்து எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பா.ஜ.கவினர் மும்பையில் போராட்டம் நடத்தினர். மும்பையில் பா.ஜ.க அமைச்சர் கிரீஷ் மகாஜன்... மேலும் பார்க்க

பெங்களூரு: `வெயில் தாங்க முடியலை' - ஹோட்டலில் ஏ.சி அறை வாடகைக்கு எடுத்து வெப்பத்தை தணித்த பெண்

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. காலை 10 மணிக்கு மேல் மக்களால் வெளியில் வர முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டு பருவ மழையும் குறைவாகவே இருக்கும்... மேலும் பார்க்க

தரையிறங்க முடியாமல் 4 மணி நேரம் வானில் பறந்த விமானம்; அச்சத்தில் அழுத பயணிகள்; என்ன நடந்தது?

ஹைதராபாத்தில் இருந்து ஹூப்ளிக்கு Fly91 Flight என்ற தனியார் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் சென்று கொண்டிருந்தபோது ஹூப்ளி அருகில் சென்ற போது திடீரென விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனா... மேலும் பார்க்க

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது' - அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடந்த போர் ஒன்றரை மாதத்திற்கு பிறகு தற்காலிகமாக முடிவுக்கு வந்து இருக்கிறது. ஆனால் இந்த தற்காலிக போர் நிறுத்தமும் விரைவில் முடிய இருக்கிறது. ஈரானுடன் மீண்டும் எப்போது அமெ... மேலும் பார்க்க

தீபிகா படுகோனேவுக்கு இரண்டாவது குழந்தை; மகள் மூலம் கர்ப்பத்தை அறிவித்த தம்பதி

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மற்றும் நடிகர் ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த 2024ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை பிறந்த பிறகு தீபிகா படுகோனே படங்களில் நடிக்க பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். அ... மேலும் பார்க்க