செய்திகள் :

பீகார்: ATM-க்குள் சென்று முடிவெட்டிக்கொள்ளும் மக்கள்; வைரலாகும் ஏடிஎம் சலூன் பற்றி தெரியுமா?

post image

சமீப காலமாக ஆன்லைன் பணப்பரிவத்தனை அதிகரித்து இருப்பதால் மக்கள் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பது குறைந்து இருக்கிறது. இதனால் அதிகமான ஏ.டி.எம்.கள் நகரங்களில் மூடப்பட்டு வருகின்றன.

சில ஏ.டி.எம்.கள் பணம் நிரப்பப்படாமல் மூடப்பட்டு இருக்கின்றன. பீகாரில் அது போன்று மூடப்பட்ட ஏ.டி.எம் ஒன்று இப்போது சலூனாகச் செயல்பட்டு வருகிறது. அதுவும் சம்பந்தப்பட்ட எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். அறிவிப்பு பலகையைக் கூட அகற்றாமல் அப்படியே வைத்துக்கொண்டு சலூன் கடை செயல்பட்டு வருகிறது.

பீகாரின் தானாபூர் என்ற இடத்தில் இந்த ஏ.டி.எம். சலூன் செயல்பட்டு வந்தது. இதனால் அந்த ஏ.டி.எம் சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

உள்ளே சலூன் கடை இருப்பது தெரியாமல் அதிகமானோர் பணம் எடுக்க உள்ளே சென்றுவிட்டு உள்ளே முடிவெட்டுவதற்கு கண்ணாடியும், இருக்கைகளும் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.

ஏடிஎம்
ஏடிஎம்

அவர்களிடம் சலூன் கடைக்காரர் ஏ.டி.எம். மூடப்பட்டு விட்டது என்று கூறி வருகிறார். இதனால் பணம் எடுக்க சென்றவர்கள் ஏமாற்றத்துடன் வெளியில் வந்து கொண்டிருந்தனர். ஏ.டி.எம் சலூன் சமூக வலைத்தளத்தில் வைரலானவுடன் சலூன் கடைக்கு வெளியில் இருந்த எஸ்.பி.ஐ. ஏ.எம் போர்டு அங்கிருந்து அகற்றப்பட்டது.

இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், ''பல ஆண்டுகளாக அந்த இடத்தில் ஏ.டி.எம். செயல்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஏ.டி.எம். மூடப்பட்டது. அதில் இருந்த மெஷின் திடீரென காணாமல் போய்விட்டது.

அந்த அறை மட்டும் அறிவிப்பு பலகையுடன் அப்படியே இருந்தது. அந்த இடத்தை கடை உரிமையாளர் அப்படியே சலூன் கடைக்கு வாடகைக்கு விட்டார். ஆனால் சலூன் கடைக்காரர் வங்கியின் ஏ.டி.எம். அறிவிப்பு பலகையை அகற்றாமல் அப்படியே சலூன் கடையைத் திறந்துவிட்டார்'' என்று தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதி மக்கள் அடிக்கடி பணம் எடுக்க சலூன் கடைக்குள் சென்று வருகின்றனர். சிலர் உள்ளே வந்துவிட்டு பணம் எடுக்கமுடியாமல் முடிவெட்டிக்கொண்டு வெளியில் வருகின்றனர்.

இந்தச் செய்தி வைரலானவுடன் நெட்டிசன்கள் பலரும், வாடிக்கையாளர்கள் இப்போது பணம் எடுக்கச் சென்றுவிட்டு, அதற்குப் பதிலாக ஹேர்கட் செய்துகொண்டு வெளியே வருகிறார்கள் என்று கேலி செய்து வருகின்றனர். வேறு சிலர், அவசரமாக பணம் எடுக்க உள்ளே நுழைந்து, தவறுதலாக ஷேவ் செய்துகொள்ள முன்பதிவு செய்துவிடக்கூடும் என்ற தெரிவித்தனர்.

பழைய வணிக வளாகங்கள், தங்களின் முந்தைய அடையாளத்தின் தடயங்களை அப்படியே தக்கவைத்துக்கொண்டு, முற்றிலும் மாறுபட்ட வணிகங்களாக உருமாறுவதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

புனே: "தண்ணீருக்காக தினமும் காட்டுக்குள் 4 மணி நேரம் நடக்கணும்" - பழங்குடியினப் பெண்களின் அவலநிலை

மும்பைக்கு அண்டை மாவட்டமான தானே பகுதியில் இருந்துதான் தண்ணீர் சப்ளையாகிறது. ஆனால் அதே தானே மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தினமும் தண்ணிருக்காக 4 மணி நேரம் நடக்கும் அவல நிலை இருந்து வருகிறது... மேலும் பார்க்க

12 ஆண்டுகள் காத்திருந்த பெண்.... ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்!

தம்பதிக்கு எத்தனை வசதிகள், செல்வங்கள் இருந்தாலும் குழந்தை இல்லை என்றால் அது ஒரு மிகப்பெரிய வருத்தமாகவே இருக்கும். எதியோப்பியாவில் ஒரு பெண் திருமணமாகி கடந்த 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தார... மேலும் பார்க்க

ஏசி தண்ணீரில் சமையல்: வளைகுடா, ஹார்மூஸ் ஜலசந்தியில் தவிக்கும் இந்திய கப்பல் மாலுமிகள்

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் தொடங்கியதில் இருந்து வளைகுடா மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் சரக்கு கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் தனது நாட்டிற்கு அருகில் இருக்க... மேலும் பார்க்க

"Constable போதும்; என்னை பதவியிறக்கம் செய்யுங்கள்" - Sub Inspector பதவியைத் திரும்பியளித்த காவலர்

அனைவரும் தங்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கவேண்டும் என்று விரும்புவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் டெல்லியைச் சேர்ந்த ஒரு சப் இன்ஸ்பெக்டர் தனக்கு தனது பழைய கான்ஸ்டபிள் வேலையை மீண்டும் கொடுங்கள் என்று கேட்ட... மேலும் பார்க்க

வெள்ளியங்கிரி மலையில் மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு – ஒரே ஆண்டில் 8 பேர் உயிரிழந்த சோகம்!

கோவை மாவட்டம், பூண்டி பகுதியில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை, மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இந்த மலையேற ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்களுக்கு வனத்துறையினர் ... மேலும் பார்க்க

மும்பை: தர்ப்பூசணி சாப்பிட்டு 4 பேர் மரணமடைந்த விவகாரம் - விலகிய மர்மம்!

மும்பை பைதோனி பகுதியை சேர்ந்த அப்துல்லா என்பவர் குடும்பம் கடந்த மாதம் 25ம் தேதி இரவு உறவினர்களை அழைத்து தங்களது வீட்டில் விருந்து கொடுத்தனர். அனைவரும் பிரியாணி சாப்பிட்டனர். அன்று இரவு விருந்தினர்கள் ... மேலும் பார்க்க