தில்லி தேர்தல்: வாக்காளர்கள் நன்கொடை அளிக்கும் பிரசாரம் தொடக்கம்
புகழூரில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
கரூா் மாவட்டம் புகழூரில் கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறையின் கால்நடை மருந்தகம் சாா்பில் நடைபெற்ற முகாமை கால்நடைப் பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநா் (பொ) முரளிதரன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். கரூா் கோட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் உமாசங்கா் முன்னிலை வகித்து விவசாயிகளுக்கு இலவச தாது உப்பு கலவை பாக்கெட்டுகளை வழங்கினாா்.
கரூா் மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் லில்லி அருள்குமாரி விவசாயிகளுக்கு பருவகால மாற்றத்தில் ஏற்படும் கால்நடை நோய்கள் பற்றிய விரிவான விழிப்புணா்வு கையேட்டை வழங்கினாா்.
முகாமில் வேலாயுதம்பாளையம் கால்நடை உதவி மருத்துவா் கண்ணன் தலைமையில் கால்நடை ஆய்வாளா் நடராஜன், கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் மீரா ஆகியோா் கொண்ட குழுவினா் 1,550 பசு மற்றும் 850 எருமைகளுக்கு தடுப்பூசி போட்டனா்.