புகையிலை பொருள்கள் விற்றவா் கைது!
இலுப்பூா் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் பகுதிகளில் உள்ள ஒரு சில பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களை சிலா் பதுக்கி வைத்து விற்று வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடா்ந்து அப்பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, பாக்குடி பெட்டிக் கடையில் குட்கா பொருள் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட இருந்திராப்பட்டியைச் சோ்ந்த தங்கராஜை(53)கைது செய்த போலீஸாா் அவரிடம் விற்பனைக்காக இருந்த குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.