செய்திகள் :

'புதிய தலைமுறை' சேனல் நிறுத்தம்: "கரூர் துயரத்தின்போது ஓட்டம் பிடித்தவர்தானே விஜய்" - அதிமுக கண்டனம்

post image

நேற்று அரசு கேபிள் டிவி சேவையில் 'புதிய தலைமுறை' சேனல் இருட்டடிப்பு செய்யப்பட்டது. நேற்று மதியம் 'புதிய தலைமுறை' சேனல் பலருக்குத் தெரியவில்லை என வந்த புகாரை அடுத்து அரசு கேபிள் டிவி தரப்பினரிடம், சேனல் தரப்பினர் பேச முயன்றிருக்கின்றனர்.

ஆனால், அவர்களிடம் இருந்து முறையான பதிலைப் பெற முடியவில்லை எனச் சேனல் தரப்பிலிருந்து தெரிவித்திருக்கிறார்கள்.

அரசு கேபிளில் 'புதிய தலைமுறை' சேனல் நிறுத்தம்
அரசு கேபிளில் 'புதிய தலைமுறை' சேனல் நிறுத்தம்

நேற்று இரவு முதல் அரசு கேபிள் சேவையில் மீண்டும் தெரியத் தொடங்கியிருப்பதாகவும் சேனல் தரப்பு விளக்கமளித்திருக்கிறார்கள்.

கட்சி தொடங்கப்பட்டது முதல் செய்தியாளர்களைச் சந்திக்காத முதல்வர் விஜய், டெல்லி சென்றிருந்தபோதும் பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் புறக்கணித்தார்.

இந்தச் செய்தியை வெளியிட்டதற்காக புதிய தலைமுறை இருட்டடிப்பு செய்யப்பட்டதாக சமூக வலைத்தளப் பக்கங்களில் கண்டனம் வலுத்தது.

அரசு கேபிள் சேவையில் இருந்து 'புதிய தலைமுறை' சேனல் இருட்டடிப்பு செய்யப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்திருக்கிறது.

அந்த அறிக்கையில், "அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

திமுக ஆட்சிக்கும், இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சிக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க எனக் கேட்டால் யாராக இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாது.

விஜய்
விஜய்

ஆட்சிக்கு வந்தவுடனே சமூக வலைத்தளப் பதிவுகள் மீது வழக்குகள், எதிர்க்கட்சியினரின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்க காவல்துறை வாயிலாக X, Meta ஆகிய நிறுவனங்களுக்கு கடிதங்கள், அரசை விமர்சித்த நபர் கைது, தற்போது செய்தி சேனல் முடக்கம்… இது அப்பட்டமான திமுக மாடல்!

அப்படி எதற்காக புதிய தலைமுறை Blackout செய்யப்படுகிறது என்று பார்த்தால், டெல்லியில் இன்றைய முதல்வர் செய்தியாளர்களைச் சந்திக்காமல் தெறித்து ஓடிய செய்தியை வெளியிட்டது எனச் சொல்லப்படுகிறது.

டெல்லியில் மட்டுமல்ல, கட்சி ஆரம்பித்த நாள் முதல் ஒருமுறை கூட செய்தியாளர்களை இவர் சந்திக்கவே இல்லையே? கரூர் துயரம் நடந்தபோது கூட, “30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்” என்று செய்தியாளர்கள் கூறியபோது கூட அதைக் கண்டுகொள்ளாமல் ஓட்டம் பிடித்தவர்தானே இவர்?

மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு இருந்து, தனக்கென ஒரு போலியான Demigod இமேஜ் உருவாக்கிக் கொள்ள இவர்கள் செய்யும் தந்திரம்தான் ஊடகங்களில் இருந்து ஒதுங்கி நிற்பது.

ஆனால், இது சினிமா அல்ல; பொதுவாழ்க்கை! மக்களின் கேள்விகளைக் கேட்கும் எதிர்க்கட்சிகள், ஊடகங்களை நேருக்கு நேர் சந்தித்துப் பதில் சொல்லத் திராணி இருக்க வேண்டும்.

அது இன்றைய முதல்வருக்கு இருக்கிறதா? இனியாவது வருமா? உங்கள் பக்கம் இருக்கும் தவறை ஒரு ஊடகமோ, தனிநபரோ சுட்டிக்காட்டினால், அதைத் திருத்திக்கொள்ளப் பாருங்கள் அல்லது, மறுத்து உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.

அதை விடுத்து ஊடகத்தை முடக்குவது, தனிநபர்களைக் கைது செய்வது என ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்காதீர்கள். புதிய தலைமுறை மீண்டும் அரசு கேபிளில் பழைய வரிசை எண்ணிலேயே ஒளிபரப்பு செய்திட வேண்டும் என இவ்வரசை வலியுறுத்துகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

`கோவைக்கு மெட்ரோ, எங்கள் தேர்தல் அறிக்கையிலேயே இருக்கிறது; அதற்கான நடவடிக்கைகள்...'- அமைச்சர் சம்பத்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார், கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவ கட்டமைப்புகள், மருந்து கையிருப்பு, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் நிலை, நோயாளிகளு... மேலும் பார்க்க

'பிள்ளை பிடிப்பவர்களிடம் கவனமாக இருங்கள்..!' - நீலகிரி அதிமுக மா.செ சூட்சும அறிக்கை

நீலகிரி மாவட்ட அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் பலர் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் த.வெ.க- வில் இணைந்து வருகின்றனர். எஸ்.பி.வேலுமணி அணிக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில், அ.தி.மு.க நீலகிரி மாவட்டச் செய... மேலும் பார்க்க

'பழைய பதவியை பயன்படுத்தக்கூடாது'- எடப்பாடி போட்ட கண்டிஷன்; மீண்டும் அதிமுகவில் பிளவை உண்டாக்குமா?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எதிர்பாராத சரிவைச் சந்தித்து, 47 இடங்களுடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இந்தத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து கட்சிக்குள் கடுமையான உட்கட்சிப் பூசல்களு... மேலும் பார்க்க

சர்ச், பள்ளி, டாஸ்மாக் மூணும் அடுத்தடுத்து.! 'எப்ப சார் கடையை மூடுவீங்க?' கேட்பது பெரம்பூர் மக்கள்!

``பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் 717 மதுபானக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூடப்படும்" என தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதும் விஜய் அதிரடி உத்தரவு பிற... மேலும் பார்க்க

"மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் பொறுப்பின்றி பேசுகிறார்"- அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார்

மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு வரவேண்டிய நீரின் அளவு பெருமளவு குறையும். இதனால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும். ஆனால் கர்நா... மேலும் பார்க்க