செய்திகள் :

புதுச்சேரி: `அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சம்பளம் கிடைக்குமா?'- `பட்ஜெட்’ பொதுநல வழக்கால் சிக்கல்

post image

புதுச்சேரியில் நடந்துமுடிந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்த நிலையில், முதலமைச்சராகப் பதவியேற்றார் ரங்கசாமி. அதையடுத்து தவணை முறையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ், ராஜவேலு, சிவக்கொழுந்து மற்றும் ஜி.என்.எஸ் ராஜசேகரன் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

அதையடுத்து தங்கள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயத்திற்கு உள்துறை பதவியை ஒதுக்க வேண்டும் என்றும்,  அத்துடன் சபாநாயகர் பதவியும் வேண்டும் என்றும் முதல்வர் ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்தது பா.ஜ.க.

அதனால் அமைச்சர்கள் பதவியேற்று மூன்று மாதங்களைக் கடந்தும், அவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படாமல் இருந்தது. அதையடுத்து பா.ஜ.க கொடுத்த அழுத்தத்தின் காரணமாக உள்துறையை பா.ஜ.க-வுக்கு கொடுக்க சம்மதித்தார் முதல்வர் ரங்கசாமி.

முதல்வர் ரங்கசாமியுடன் அமைச்சர்கள்
துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமியுடன் அமைச்சர்கள்

அதையடுத்து கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி அமைச்சர்களின் இலாகா ஒதுக்கீட்டுப் பட்டியலுக்கு ஒப்புதல் கொடுத்தார் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன். இலாகாப் பட்டியல் முடிவுக்கு வந்ததும், சபாநாயகர் பதவி வேண்டும் என்று மீண்டும் அழுத்தம் கொடுத்தது பா.ஜ.க. ஆனால் பா.ஜ.கவை விட அதிக இடங்களில் வெற்றிபெற்ற தங்களிடம்தான் சபாநாயகர் பதவி இருக்க வேண்டும் என்று நினைக்கும் முதல்வர் ரங்கசாமி, அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த உரசலால் தற்போது வரை சபாநாயகர் தேர்தல் நடத்தப்படவில்லை. சபாநாயகருக்கான தேர்தலை ஜூலை 2-ம் தேதி நடத்துவதற்கு அனுமதி கேட்டு, கடந்த ஜூன் 24-ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு கோப்பை அனுப்பியது சட்டப்பேரவைச் செயலகம்.

ஆனால் சபாநாயகர் பதவியை பா.ஜ.க-வுக்கு தருவதற்கு முதல்வர் ரங்கசாமி ஒப்புக் கொள்ளாத நிலையில், இரண்டு மாதங்களாக அந்தக் கோப்பு ஆளுநர் மாளிகையின் பரிசீலனையில் (!?)இருக்கிறது.

இந்த நிலையில்தான் நாளை மறுதினம் ஆகஸ்ட் 24-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது என்று சட்டப்பேரவைச் செயலகம் அறிவிப்பை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, `சபாநாயகர் தேர்வு செய்யப்படும் வரை, அவருக்குரிய அனைத்து அதிகாரங்களும் துணை சபாநாயகருக்கு இருக்கிறது' என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் துணை சபாநாயகர் அன்பழகன்.

அ.தி.மு.க-வின் புதுச்சேரி மாநிலச் செயலாளரான அன்பழகன், உப்பளம் தொகுதியின் எம்.எல்.ஏ. இதற்கிடையில், ``என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணிக்குள் நிலவும் குழப்பத்தால், தேர்தல் முடிவுகள் வெளியாக மூன்று மாதங்களைக் கடந்தும் இன்னும் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடத்தப்படவில்லை.

அப்படி இருக்கும்போது தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடத்தாமல், பட்ஜெட் கூட்டம் நடத்துவது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.

 சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அதனால் அந்தத் தேர்தலை நடத்துவதைத் தவிர, வேறு எந்த காரணங்களுக்காகவும் சட்டசபையைக் கூட்டக்கூடாது என்று தடை விதிக்க வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சுப்பிரமணி. அந்த மனு மீதான விசாரணை நேற்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் ஜி.அருள்முருகன் முன்பு வந்தது.

அப்போது, அந்த மனுவிற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலாளர் மற்றும் சட்டசபைச் செயலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் இடைக்கால பட்ஜெட்டின் கால அவகாசம் முடிகிறது. அதற்கு முன்பாகவே முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவு அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க