செய்திகள் :

புனே: `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தும் பயனில்லை' - பவார் குடும்பத்திடமிருந்து கைநழுவிப்போன கோட்டை!

post image

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாக பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் இணைந்து புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டிட்டன. ஆரம்பத்தில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டியிட திட்டமிட்டது. அதன் பிறகு இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தனித்தனி சின்னத்தில் போட்டியிட்டன.

இந்த இரண்டு மாநகராட்சிகளும் 2017ம் ஆண்டு வரை தேசியவாத காங்கிரஸ் வசம் இருந்தது. எனவே அஜித்பவார் பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்காமல் தனது பெரியப்பா சரத்ப வார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார்.

ஆனால் இத்தேர்தலில் பா.ஜ.க யாருமே எதிர்பாராத விதமாக இரண்டு மாநகராட்சிகளையும் கைப்பற்றி இருக்கிறது. புனே மாநகராட்சியில் பா.ஜ.க 80 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது.

அதன் கூட்டணி கட்சியான சிவசேனா(ஷிண்டே) தனித்து போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 6 இடங்களிலும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சிக்கு பிறகு மிகவும் பணக்கார மாநகராட்சியாக கருதப்படும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சியை கடந்த 2017ம் ஆண்டு வரை தேசியவாத காங்கிரஸ் கட்சிதான் தன் வசம் வைத்திருந்தது. ஆனால் இத்தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக பிரிந்து அக்கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இங்கேயும் பா.ஜ.க 77 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது.

ஆனால் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 37 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 10 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. இத்தேர்தல் மூலம் பவார் குடும்பம் முதல் முறையாக புனேயை இழந்துள்ளது. புனேயில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட முன்னாள் மேயர் பிரசாந்த் ஜக்தாப் 18வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் பிரசாந்த் தாயார் ரத்னபிரபா இத்தேர்தலில் தோல்வியை தழுவினார்.

மும்பையில் முதல் முறையாக ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 4 வார்டுகளில் வெற்றி பெற்று இருக்கிறது.

தாதா மகள்கள் தோல்வி

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலையாகி இருக்கும் மும்பை தாதா அருண் காவ்லியின் மகள் யோகிதா காவ்லி இத்தேர்தலில் மும்பையில் தோல்வியை தழுவினார். அருண் காவ்லியின் மற்றொரு மகளான கீதா காவ்லி 212வது வார்டில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.

அருண் காவ்லி மகள்கள்

இரண்டு பேரும் அருண் காவ்லி தொடங்கிய அகில பாரதீய சேனா என்ற கட்சி சார்பாக போட்டியிட்டனர். இதே போன்று சிவசேனா(ஷிண்டே) எம்.பி. ரவீந்திர வாய்க்கர் மகள் தீப்தி வாய்கர் மும்பை 73வது வார்டில் தோல்வியை தழுவினார்.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா முன்னாள் எம்.பி. ராகுல் ஷெவாலேயின் மைத்துணி வைசாலி சாவ்லே தாராவி 183வது வார்டில் போட்டியிட்டார். ஆனால் இத்தேர்தலில் வைசாலியை காங்கிரஸ் வேட்பாளர் ஆஷா தீபக் காலி என்பவர் 1450 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மும்பையில் 1.03 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். அவர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து இருந்தனர். 75 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் கொண்ட மும்பை மாநகராட்சி தேர்தலில் 1,700 பேர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சறுக்கிய தமிழ் வேட்பாளர்கள்; 5 முறை கவுன்சிலராக இருந்த ரவி ராஜா, மாரியம்மாள் தாராவியில் தோல்வி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவியில் உள்ள 185வது வார்டில் பா.ஜ.க சார்பாக ரவி ராஜா போட்டியிட்டார். ரவி ராஜா இதற்கு முன்பு 5 முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மும்பை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்... மேலும் பார்க்க

Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!

ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறார். ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டு... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மும்பையில் ஏற்கனவே பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மா... மேலும் பார்க்க

சுவாச நோய்களால் 9,211 பேர் உயிரிழப்பு; டெல்லி அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

2024-ஆம் ஆண்டில் மட்டும் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பொதுமக்களின... மேலும் பார்க்க

கோட்டையை போராடி இழந்த உத்தவ்: ஷிண்டேயுடன் சேர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மும்பைதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவு... மேலும் பார்க்க

காங்கிரஸ்: கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனை; டெல்லிக்குச் செல்லும் செல்வப்பெருந்தகை!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நாளை (ஜன.17) டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதிப்... மேலும் பார்க்க