செய்திகள் :

பெங்களூரு : தாய், தந்தை, சகோதரியை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பெண் - அதிர்ச்சி சம்பவம்

post image

பெற்றோர், சகோதரி உள்ளிட்ட மூன்று பேரை, மகளே கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டு பெங்களூருவில் வசித்து வரும் கம்ப்யூட்டர் எஞ்சினியரான சோமசுந்தர் - முத்துலட்சுமி தம்பதிக்கு ஸ்வேதா, ப்ரியா என இரு மகள்கள். கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் முடித்துள்ள ஸ்வேதா கென்னட் என்பவரை காதலித்து வந்ததை பெற்றோர்கள் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறி அடுக்குமாடி குடியிருப்பில் காதலன் கென்னட்டுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று ஸ்வேதா வீட்டுக்கு சென்ற சோமசுந்தர், முத்துலட்சுமி, ப்ரியா ஆகியோருக்கும் ஸ்வேதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமான ஸ்வேதா, காதலனுடன் சேர்ந்து மூவரையும் கத்தியால் குத்தி கொலை செய்து தப்பித்து சென்றுள்ளனர்.

கென்னட் - ஸ்வேதா

சத்தம் கேட்டு அக்கம்பக்கம் வசிப்பவர்கள் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்பு காவல்துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

தலைமறைவான ஸ்வேதாவையும், காதலனையும் தனிப்படையினர் தேடி வந்த நிலையில் புதுச்சேரி தப்பித்துச் செல்லும் வழியில் ஸ்வேதாவை இன்று கைது செய்தனர். கென்னட்டை தேடி வருகின்றனர்.

பெங்களூரு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள இந்தச் சம்பவம் குறித்து ஸ்வேதாவிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி: 625 வகை போலி மருந்துகள்… நாடு முழுவதும் சப்ளை! - அடுத்தடுத்து சிக்கும் உயரதிகாரிகள் ?

இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் ஃபார்மா (Sun Pharmaceutical Industries Limited),தங்களின் உயிர்காக்கும் மருந்துகள் புதுச்சேரியில் போலியாக உற்பத்தி செய்யப்படுவதாக கடந்த 2024-ம் ஆண்ட... மேலும் பார்க்க

தருமபுரி: 3 குழந்தைகளுடன் கிணற்றில் மிதந்த தாயின் சடலம்; சந்தேகம் கிளப்பும் கயிறு - போலீஸ் விசாரணை!

தருமபுரி அருகே 3 குழந்தைகள், தாய் என 4 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம், அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலைதருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தோக்கம்பட்டி கிர... மேலும் பார்க்க

10 வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது; நத்தத்தில் தொடரும் மோசடி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நத்தம் பகுதியில் திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள... மேலும் பார்க்க

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை சரவணன் கூலிப்படையை ஏவி மற்றொரு கொலைக்குத் திட்டம்; பின்னணி என்ன?

மாற்றுத்திறனாளி உரிமை செயல்பாட்டாளரும் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருமான முருகானந்தம் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேன் மொழி மெட்ரிகுலேஷ... மேலும் பார்க்க

ரூ.15,000-க்கு வங்கிகளின் போலி செயலி விற்பனை - பள்ளி படிப்பை கூட முடிக்காதவர் சிக்கியதெப்படி?

நாடு முழுவதும் இணையதள மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த மோசடியில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இது போன்ற மோசடிகள் அதிக அ... மேலும் பார்க்க

மதுரை: "2 லட்சத்திற்கு மாதம் 20 ஆயிரம் வட்டி" - தற்கொலையில் முடிந்த கந்துவட்டி கொடுமை

மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒ... மேலும் பார்க்க