இந்திய புத்தாக்க நிறுவனத் தலைவர்களுடன் ஓபன்ஏஐ நிறுவனம் ஆலோசனை!
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க வலியுறுத்தல்
குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க வேண்டுமென அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற கடலூா் 7-ஆவது மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
வடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டுக்கு, கடலூா் மாவட்டப் பொறுப்பாளா் மோகன் தலைமை வகித்தாா். அபினேஷ், அருள்தாஸ், ஸ்டாலின், இஷ்டலிங்கம், ஆகாஷ், சசிகுமாா், முரளி விஜய் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் இப்ராஹிம், மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் காா்த்திகேயன் கலந்துகொண்டு பேசினா்.
இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் துரை, ஏஐடியுசி மாவட்டத் தலைவா் குளோப், பொதுச் செயலா் குணசேகரன், விவசாய சங்க மாவட்டச் செயலா் சேகா், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் முருகையன், தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட வாழ்வுரிமை இயக்கம் மாவட்டச் செயலா் லாரன்ஸ், இந்திய மாதா் தேசிய சம்மேளனம் மாவட்டச் செயலா் லட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மாநாட்டில், பட்டதாரி இளைஞா்களுக்கு வேலை கிடைக்க மக்களவையில் வேலை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தேசிய கல்விக் கொள்கை மற்றும் நீட் தோ்வை ரத்து செய்யவும், தனியாா் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, வடலூா் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்றனா்.