செய்திகள் :

’பெயருக்கு முன்னால் `டாக்டர்' என போடுவது ஏன்?’ – கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. விளக்கம்

post image

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் துடியலூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காய்கறி சந்தையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனை போக்குவதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும்.

தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக வருகின்றனர். அதற்கான மருந்துகள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். அவையும் கூடிய விரைவில் சரி செய்யப்படும். அதே சமயம் நாய் கடிகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்றார்.

கனிமொழி சந்தோஷ்
கனிமொழி சந்தோஷ்

B.A.B.L படிப்பு என அபிடவிட்டில் குறிப்பிட்டுவிட்டு, டாக்டர் என பெயருக்கு முன்னால் குறிப்பிடப்பட்டு இருப்பதாக எழுந்த சர்ச்சை குறித்த கேள்விக்கு, “நான் டாக்டரேட் பட்டம் ஜோதிடத்தில் வாங்கி உள்ளேன். என்னுடைய புரொபஷன் சட்டப்படிப்புதான். நான் அடிப்படையில் வழக்கறிஞர். ஜோதிடத்தில் ஆர்வம் என்பதால், அதில் டாக்டரேட் முடித்துள்ளேன்.

மருத்துவம் படித்த டாக்டராக இருந்தாலும் சரி, டாக்டரேட் படித்திருந்தாலும் சரி அதனை டாக்டர் என்றுதான் பொதுவாக குறிப்பிடுவார்கள். அப்படி இருக்கும்போது, டாக்டர் என்பது எனக்கு புனைப்பெயராக மாறிவிட்டது. என்னுடைய வலைதள வீடியோக்கள் அனைத்தும் உடல் நலம் சார்ந்து அதிகமாக இருக்கும். அதனால் டாக்டர் படித்துக் கொண்டு இவ்வாறு சர்ச்சையாக பேசுகிறேன் என்று புரிந்து கொண்டுவிட்டார்கள். நான் அடிப்படையில் சட்டப்படிப்பு படித்தவர் ஜோதிடத்தில் டாக்டரேட் முடித்துள்ளேன்” என பதிலளித்தார்.

TVK: ’அதிகாரிகளை வீட்டிற்கு வரவழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தினாரா?’ - சர்ச்சையில் MLA கனிமொழி சந்தோஷ்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக த.வெ.க-வைச் சேர்ந்த கனிமொழி சந்தோஷ் பதவி வகித்து வருகிறார்.இந்த நிலையில் கனிமொழி சந்தோஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், ”கவுண்டம்பாளையம் ... மேலும் பார்க்க

”கொளத்தூர் மக்கள் நன்றி மறந்தவர்கள்; திருச்சி கிழக்கில்..!” - அனிதா ராதாகிருஷ்ணன்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 7வது முறையாக தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதையடுத்து தொகுதிக்குட... மேலும் பார்க்க

`தமிழகத்தை ஆட்சி செய்யும் தகுதியை தவெக இழந்துவிட்டது!’ - தவெகவை சாடும் அதிமுக

புதுச்சேரி அதிமுகவின் மாநிலச் செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ-க்களில் சிலர், தங்கள் சுயநலத்திற்... மேலும் பார்க்க

’விசுவாசம் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் பேசுவது அரசியல் முரண்பாட்டின் உச்சம்!’ –காங்கிரஸ் பதிலடி

காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிடுள்ள அறிக்கையில், “அமைச்சர் பதவியும் அதிகாரமும் பறிபோன பின்னர், அரசியல் விரக்தியிலும் அகங்காரத்திலும் சிலர் தங்களது நாவைக் கட்டுப்படுத்... மேலும் பார்க்க

மீண்டும் பெட்ரோல், டீசல் விலை 90 பைசா ஏற்றம்; சென்னையில் எவ்வளவு? 3 நாள்களில் இரண்டு முறை ஏற்றம்!

ஈரான் போர் தொடங்கி 2 மாதங்கள் 21 நாள்கள் ஆகின்றன. அமெரிக்கா, ஈரான் தாக்குதல் தற்காலிகமாக தான் நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, முழுமையாக முடிவுக்கு வரவில்லை. ஹார்முஸ் ஜலசந்தியை இன்னும் மூடியே வைத்திருக்கிறது... மேலும் பார்க்க