Kara: "நாங்கெல்லாம் போயஸ் கார்டன்ல வீடு வாங்கக்கூடாதா?" - மீம்ஸுக்கு தனுஷ் சொன்ன...
'பெற்றொர்' அத்தியாயத்தை கடனாளியாக இல்லாமல் மகிழ்ச்சியாகத் தொடங்க 'பிளான்'! | பணம் வளர்ப்போம்
பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பதுதான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும்.
அப்படி இந்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரை, நாம் பார்க்கப்போகும் டாபிக், 'குழந்தைகளுக்கான நிதி திட்டமிடல்'.
வாழ்க்கையில் ஒரு அழகான அத்தியாயம் 'பெற்றோர்'. இது அழகான அத்தியாயம் என்பதை விட, இது பொறுப்பான அத்தியாயமும் கூட.

அந்த அத்தியாயத்தை முன்னரே சரியாக, பக்காவாகத் திட்டமிட்டு, எளிதாகக் கடப்பது எப்படி என்பதை நமக்கு விளக்குகிறார் நிதி ஆலோசகர் முனைவர் A.V செந்தில்.
"வாழ்க்கையில் குழந்தைக்கு ஆகும் முதல் செலவு என்றால், அது 'டெலிவரி' செலவுதான்.
சில அலுவலங்கங்களில் கொடுக்கும் மருத்துவ இன்சூரன்ஸிலேயே 'பேபி டெலிவரி கவரேஜ்' இருக்கிறது. இவர்கள் டெலிவரி செலவைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
ஆனால், அப்படி இல்லாதவர்கள் முதலீட்டைத் தொடங்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில், மருத்துவ செலவுகள் மிக காஸ்ட்லி என்பது நம் அனைவருக்குமே தெரியும்.
டெலிவரிக்காக தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றால் செலவு எவ்வளவு ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். அதுவும் சி-செக்ஷனாக இருந்தால் செலவை யோசித்து பாருங்கள்... தலையே சுற்றிவிடும்.
இந்தச் செலவை நாம் முன்னரே திட்டமிடவில்லை என்றால், கடைசியில் கடன்தான் வாங்க வேண்டியதாக இருக்கும்.
கடனில் இருந்து தப்பிக்க, திருமணம் ஆன உடனேயே ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை டெப்ட் ஃபண்ட், கார்ப்பரேட் ஃபண்ட், ஆர்.டி, பாண்ட் ஆகியவற்றில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வாருங்கள்.
பல்க்கான தொகை இருந்தால் எஃப்.டியில் முதலீடு செய்யுங்கள்.

மேலே சொல்லியிருக்கும் முதலீடுகள் அனைத்தும் ரிஸ்க் குறைவான முதலீடுகள். ஏனெனில், குழந்தைப் பெற்றுக்கொள்ள 2 - 3 ஆண்டுகளுக்குள் பிளான் செய்திருப்போம். அதனால், இதில் அதிக ரிஸ்க் எடுக்க முடியாது.
ஆக, திருமணம் ஆன உடனேயே முதலீடு செய்யத் தொடங்கி, பெற்றோர் அத்தியாயத்தை கடனாளியாக இல்லாமல்... மகிழ்ச்சியாகத் தொடங்குங்கள்".




















